அயோத்தி ராமர் கோயிலின் உயரத்தை மேலும் 20 அடி உயரத்துக்கு எழுப்ப திட்டம் - பக்தர்கள் மகிழ்ச்சி!
அயோத்தி ராமர் கோயிலின் உயரத்தை மேலும் 20 அடி உயரத்துக்கு எழுப்ப திட்டம் - பக்தர்கள் மகிழ்ச்சி!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது தற்போது உள்ள மிக முக்கியமான செய்தி என்னவென்றால் கோவிலின் உயரத்தை முன்பு வளர்க்கப்பட்ட திட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் கோவிலை கட்ட திட்டமிட்டுள்ளார். இந்த முக்கிய செய்தியைக் கேட்டு பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1988-ஆம் ஆண்டு திட்டமிட்டதை விட, 20 அடி அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலின் உயரம், கடந்த 1988ம் ஆண்டு திட்டமிடப்பட்ட 141 அடியில் இருந்து 161 அடியாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக, அயோத்தி ராமர் கோயிலின் முதன்மை வடிவமைப்பாளரான சோம்புராவின் மகனான, நிகில் சோம்புரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகிறாரா இல்லையா என்பது இன்றும் வரை தெளிவுபடுத்தவில்லை மேலும் கோவில் கட்டுமானத்தில் 20 சதவீதம் அதிகரித்தது மக்களுக்கும் பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி வருகின்றனர்.