Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 சுங்கச் சாவடிகள்- மத்திய அரசு திட்டம்!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 சுங்கச் சாவடிகள்- மத்திய அரசு திட்டம்!
X

KarthigaBy : Karthiga

  |  26 March 2024 2:12 PM IST

அடுத்த ரெண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதில் குறிப்பிட்டபடி பெங்களூர்- சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர், மொளசூர், கோவிந்தவாடி, பாணாவரம், மேல்பாடி ,வசந்தபுரம் இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.

விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை: கெங்கராம்பாளையம், கொத்தட்டை, ஆக்கூர், பண்டாரவாடை, விக்கிரவாண்டி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், சித்தூர் -தச்சூர் விரைவு சாலையில் மூன்று சுங்கச்சாவடிகள், மகாபலிபுரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சுங்கச்சாவடிகள் என மொத்தம் 20 சுங்க சாவடிகளை இரண்டு ஆண்டுகளில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News