நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் 20 சதவீதம் வளர்ச்சி!
மோடி அரசின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
By : Karthiga
நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மொத்த நேரடி வரி வருவாய் ரூபாய் 15.60 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகி 20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது திருத்தப்பட்ட முழு நிதியாண்டுக்கான வரி வசூல் மதிப்பீட்டில் 80% ஆகும். இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான கணக்கீட்டின்படி மொத்த நேரடி வரி வசூல் ரூபாய் 18.38 லட்சம் கோடியாகவும் இது முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை காட்டிலும் 17.30 சதவீதம் கூடுதலாகும். இதில் வரி செலுத்தியவருக்கு திரும்பி செலுத்திய தொகையை தவிர்த்து மொத்த நேரடி வரி வருவாய் என்பது 15.60 லட்சம் கோடியாக உள்ளது .இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை காட்டிலும் 20.25% கூடுதலாகும் . வரி செலுத்துவோருக்கு 2023 ஏப்ரல் ஒன்று முதல் 2024 பிப்ரவரி 10ஆம் தேதி வரை ரூபாய் 2.77 லட்சம் கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வரி வசூலானது திருத்தப்பட்ட முழு நிதியாண்டுக்கான வரி வசூல் மதிப்பீட்டில் 80 சதவீதமாகும். இதன்படி வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வருமான வரி 9.16 சதவீதம் அளவுக்கு தனிநபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி 25.67 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது .வரி செலுத்துவதற்கு திரும்பச் செலுத்திய தொகையை தவிர்த்து சிஐடி வசூல் ஆனது 13.57 சதவீதம் அளவுக்கு பி.ஐ.டி 26.91% அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE :Dinamani