Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு.! #Rainalert #TNrain

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு.! #Rainalert #TNrain

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு.! #Rainalert #TNrain

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 2:58 AM GMT

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :-

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கோவை நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று)லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகிற தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News