Kathir News
Begin typing your search above and press return to search.

20 வீரர்கள் பலியான இரவில் சீனாவுக்குள் புகுந்து விளாசிய நம் வீரர்கள் பற்றி புதிய தகவல்கள்: கட்டாக் வீரர்கள் காட்டிய கைவரிசையில் நூற்றுக்கணக்கான சீன மூக்குகள் உடைந்தது அம்பலம்.!

20 வீரர்கள் பலியான இரவில் சீனாவுக்குள் புகுந்து விளாசிய நம் வீரர்கள் பற்றி புதிய தகவல்கள்: கட்டாக் வீரர்கள் காட்டிய கைவரிசையில் நூற்றுக்கணக்கான சீன மூக்குகள் உடைந்தது அம்பலம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 2:17 AM GMT

சமீபத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டை சீன ராணுவம் மீறியதை அடுத்து நடைபெற்ற மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சீனர்கள் தரப்பில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும் கூறப்பட்டது.

ஆனால் புதிதாக சண்டை களத்தில் இருந்து வந்த தகவல்படி 3 கட்டங்களாக இந்த மோதல்கள் நடைபெற்றதாகவும் கடைசி கட்ட மோதலில் நம் பீகார் பிரிவு வீரர்கள், கட்டாக் வீரர்கள், பஞ்சாப் வீரர்கள் ஆகியோர் ஓன்று திரண்டு பல பிரிவுகளாக அணி வகுத்து சீன எல்லைக்குள் புகுந்து அங்கிருந்த 300 க்கும் மேற்பட்ட சீன படையினரை துவம்சம் செய்ததாகவும், ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல நடை பெற்ற இந்த நள்ளிரவு மோதலில் ஏற்கனவே கூறப்பட்டதை விட பல மடங்கு சீனர்கள் பலியாகி இருக்கலாம் என இப்போது தெரிய வந்துள்ளது.

இந்த மோதலுக்கு முன்பே இந்திய-சீன ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சீன ராணுவம் வைத்திருந்த அறிவிப்புப் பலகையை நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் கேட்டிருந்தது. அதற்கு சீனாவும் ஒப்புக் கொண்டது.

ஆனால் இந்த அறிவிப்பு பலகையை சொன்னபடி அப்புறப்படுத்தாததால் 16 வது இந்திய இராணுவப் பிரிவான பிஹாரி ரெஜிமென்ட் படை வீரர்கள் சிலர் தங்கள் படை தலைவர் கர்னல் சந்தோஷ் பாபுவுடன் அந்த பலகை அமைத்திருந்த இருந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த சீன ராணுவத்திடம் அதை அகற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், சீன ராணுவ வீரர்கள் மறுப்புத் மறுத்துள்ளனர்.

ஆனால் அவர்களிடம் பேசியதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நம் வீரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆரம்பித்தனர்.

அப்போது சீனர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த கைகலப்பு சில மணித்துளிகள் மட்டுமே நடைபெற்றது. இது முதல்கட்ட தாக்குதல் என்றும், காயமடைந்த வீரர்களை அனுப்பிவிட்டு மேலும் படை வீரர்களை அழைத்து வருமாறு உத்தரவிட்டு இந்திய எல்லையை பாதுகாக்க அப்போது வீரத்துடன் கர்னல் சந்தோஷ் பாபு நின்றதாகவும், சீன வீரர்கள் மீண்டும் அங்கு வருவார்கள் என திட்டமிட்டு அவர் சில வீரர்களுடன் மட்டும் அங்கு நின்றிருந்ததாக நேரில் பார்த்த வீரர்கள் தங்களை தொடர்பு கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில் இரவு 9 மணி அளவில் சீன ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் மறுபடியும் நுழைந்தார்கள் என்றும் இந்திய வீரர்களை போல பல மடங்கு அதிக எண்ணிக்கையில் சீன வீரர்கள் வந்தார்கள் என்றும் கூறினர். இதற்குள் 100 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களும் வந்துவிட இரண்டாம் கட்டமாக சண்டை ஆக்ரோஷமாக நடந்த நிலையில், சீன துருப்புக்களால் தூரத்திலிருந்து திட்டமிட்டபடி கற்கள் வீசப்பட்டதாகவும், இதில் பலத்த காயம் அடைந்த கர்னல் சந்தோஷ்பாபு ஆபத்தான நிலையில் ஆற்றில் விழுந்து மரணம் அடைந்தார் எனவும் கூறினர் .

கண் முன்னாள் தங்கள் படைத்தலைவன் உயிர் இழந்ததை பார்த்த இந்திய ராணுவம் ஆக்ரோஷமாக துணிந்து தாக்குகிறது. பதினோரு மணிவரை நடந்த இந்த சண்டையில் இரு பக்கமும் பலத்த சேதம்..

இந்த நிலையில், கர்னல் பாபுவின் சடலத்தையும் மற்றும் மரணமடைந்த மற்ற வீரர்களின் சடலத்தையும் தூக்கிக் கொண்டு இந்திய ராணுவம் தனது முகாமுக்கு செல்கிறது.

கர்னல் பாபு தாக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சிப் பிழம்பில் வீரர்கள் இருந்தார்கள் என்றும். இதற்காக பத்து முதல் பன்னிரண்டு பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்து சீன எல்லைக்குள் இரண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் வரை உள்ளே ஊடுருவிச் சென்றதாகவும் கூறினர்.

அப்போது நடந்தது தான் மிகவும் ஆக்ரோஷமான சண்டை, இந்த 3 ஆம் கட்ட மோதலில் சம்பவ இடத்தில் இருந்த இந்திய வீரர்கள்.. சீன எல்லைக்குள் வீராவேசமாக நுழைந்தனர். நம் இந்திய வீரர்களுடன் திடீரென்று இந்திய ராணுவத்தின் கட்டாக் வீரர்களும், பஞ்சாப் பிரிவு வீரர்களும் இணைகிறார்கள். கட்டாக் வீரர்கள் அதிபயங்கரமாக கை சண்டையிட கூடியவர்கள். 3 குழுக்களும் குழுக்களும் இணைந்து நடத்திய தாக்குதல் ராணுவ வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமானது என்று செய்தியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சீன எல்லையின் உள்ளே இரண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரையில் இந்திய வீரர்கள் ஊடுருவி 3 இடங்களில் இந்த சண்டை நடந்தது. இது ஒருவகையான தற்கொலைப்படை தாக்குதல் என்றுதான் சொல்லவேண்டும்.

சீன ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துகொண்டே இருந்தனர். இருந்தாலும் இந்திய வீரர்கள் தளராமல் தனது ஆவேசமான தாக்குதலை நிறுத்தாமல் சீறி.. சீறிப் பாய்ந்தனர் என்றும் அவர்களின் தாக்குதலால் நிலை குலைந்த சீன வீரர்கள் பதிலடி கொடுக்க முடியாமல் திகைத்துப்போய் மேலும், மேலும் அடி வாங்கினர் என்றும் கூறப்படுகிறது.

பீகார் ரெஜிமென்ட்டை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் தனியாளாக சண்டையிட்டு 30 க்கும் மேற்பட்ட சீன வீரர்களை கொன்றதாக செய்திகள் கூறுகின்றன. 5 மணி நேரத்திற்கு மேல் இந்த சண்டை நீடித்ததாகவும், சீனர்கள் பின் வாங்கி ஓடிப்போனதாகவும் மறுநாள் காலையில் சீனர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர்களை பார்த்தபோது கதி கலங்கி நின்றனர் என்றும் நேரில் பார்த்த வீரர்கள் கூறியதாக வீரர்களுடன் பேட்டி கண்ட ஊடகம் தனது செய்தியில் கூறியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்களின் தாக்குதல் அதிபயங்கரமாக இருந்ததால்,குறிப்பாக மல் யுத்தத்தில் தேர்ந்த கட்டாக் வீரர்களின் கைவரிசை, பஞ்சாபியர்களின் பலம் வாய்ந்த குத்துக்களால் பல சீன வீரர்களின் முகம் கூட தெரியாத அளவுக்கு உருக்குலைந்து இருந்தது. பலரது கழுத்து தலையை விட்டு பிரிந்து தனியாக தொங்கிக்கொண்டிருந்தது. இந்த தாக்குதல் சொல்ல முடியாத அளவுக்கு பயங்கரமான தாக்குதல் என்றும் குறைந்தபட்சம் 150 முதல் 200 சீனர்கள் வரை இறந்திருக்கக் கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மருத்துவமனையில் பல சீன வீரர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்றும் பீகார் ரெஜிமென்ட் நடத்திய இந்த மினி சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் பலியான சீனர்களின் எண்ணிக்கை உண்மையில் நூற்றுக்கும் மேல் இருக்கும் என்றும் இந்திய தரப்பு வீரர்கள் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்திய வீரர்கள் நடத்திய இந்த ஆக்ரோஷமான தாக்குதலை அருகிலிருந்து பார்த்த சீன ராணுவ வீரன் "எனக்கு பீகார், கட்டாக் எங்கிருக்கிறது என்று தெரியாது; ஆனால் இப்போது அறிந்து கொண்டேன், ஆனால் நான் இனிமேல் ராணுவத்தில் இருக்க மாட்டேன்" .என்று வாய் விட்டு கூறினானாம்.

இந்த நிலையில் கர்னல் பாபு கொல்லப்பட்டார் என்ற தகவலை கேட்டவுடன், பீகார் ரெஜிமென்டுக்கு, சீன எல்லைக்குள் நுழைந்து பதில்தாக்குதல் நடந்த வேண்டும் என்ற உத்தரவு, தில்லியிலிருந்து வந்ததாக தெரிவதாக சில வீரர்கள் தெரிவித்ததாக இந்திய சமூக ஊடகங்களில் செய்தி பரவின என்பது குறிப்பிடத்தக்கது..

மறு நாள் காலையில் "இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் ..." என்று பாரதப் பிரதமர் மோடி அறிக்கையை வெளியிடுகிறார்.

வேறு யார் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ சீன ராணுவம் இப்போது மிக நன்றாகப் புரிந்து கொண்டது.

இந்த நிலையில் இந்தியர்கள் என்றால் மெதுவானவர்கள், மிதவாதிகள் என்று நினைத்து ஆரம்பத்தில் தங்கள் ரவுடித்தனத்தை காட்டிய சீன துருப்புக்கள் இப்போது இந்திய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலை நேரில் கண்ட பிறகு கதி கலங்கிப் போய் கிடக்கிறார்களாம்.

இப்போது எல்லையில் அமைதி. மிகவும் மயான அமைதி நிலவுவதாக குறிப்பிடுகின்றனர்.

indiatoday.in/india/story/3-separate-brawls-outsider-chinese-troops-more-most-detailed-account-of-the-brutal-june-15-galwan-battle-1691185-2020-06-21

Next Story
கதிர் தொகுப்பு
Trending News