Begin typing your search above and press return to search.
அரியலூரில் பைக்குகளில் சுற்றித்திரிந்த 200 வாலிபர்கள் கைது: வாகனங்களும் பறிமுதல்!
அரியலூரில் பைக்குகளில் சுற்றித்திரிந்த 200 வாலிபர்கள் கைது: வாகனங்களும் பறிமுதல்!

By :
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்குடன் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியலூரில் 144 தடையை மீறி இன்று காலை முதல் மதியம் வரை பைக்கில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் 200 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் விழிப்புணர்வும், அதே சமயம் பரபரப்பும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
Next Story