2009 - 14 நிதி ஆண்டை விட ஏழு மடங்கு அதிக நிதி பெற்ற தமிழக ரயில்வே! இடைக்கால பட்ஜெட்!
By : Sushmitha
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது இதில் 2024 - 25 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் ரயில்வே துறைக்கு கிட்டத்தட்ட ரூபாய் 2.52 லட்சம் கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் தமிழகத்தை பொறுத்தவரையில் 4027.08 கி. மீ தூரத்திற்கு 6,331 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த 2023 - 24 நிதியாண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாகும்.
முன்னதாக ரயில்வே அமைச்சர் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒதுக்கீடபட்ட நிதி குறித்து காணொளி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய பொழுது மத்திய பட்ஜெட்டில் 2024 - 25 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு முன்பு இல்லாத வகையில் 2.52 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் அனைத்தையும் மேம்படுத்தியுள்ளார் என கூறினார்.
மேலும் தமிழகத்தின் ரயில்வே திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2009 - 14 ஆண்டில் 879 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது அந்த ஒதுக்கீட்டில் இருந்து ஏழு மடங்கு அதிகரித்து 6,331 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது என்றும் இந்த நிதி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிடப்பட்ட தொகையிலிருந்து 251 கோடி ரூபாய் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
Source : Asianetnews Tamil