Kathir News
Begin typing your search above and press return to search.

2013 இல் சீனாவை புகழ்ந்து தள்ளிய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியின் நாடளுமன்ற பேச்சு ராகுலுக்கு தெரியாமல் பேசினாரா?

2013 இல் சீனாவை புகழ்ந்து தள்ளிய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியின் நாடளுமன்ற பேச்சு ராகுலுக்கு தெரியாமல் பேசினாரா?

2013 இல் சீனாவை புகழ்ந்து தள்ளிய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியின் நாடளுமன்ற பேச்சு ராகுலுக்கு தெரியாமல் பேசினாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2020 3:45 AM GMT

காங்கிரசு பேரியக்கம் செய்த துரோகத்தின் எச்சமாக தற்போது நம்மிடம் இருப்பது கேரளத்து தனவான் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய அரும்பெரும் உரை தற்போது சமூக வலைதளத்தில் பரவியும் பகிரபட்டும் வருகிறார்கள் நமது தேச பக்தர்கள். சீனாவை புகழும் பாரத தாயின் பிள்ளைகள் நாங்கள் தான் என மார்தட்டி கொள்ளும் காங்கிரசு பேரியக்க புதல்வர்களின் யோக்கிதையை பார்த்து உலகம் சிரிக்கிறது

வெக்கமே இல்லாத காங்கிரசு பேரியக்க முன்னால் தலைவர் ராகுல்காந்தி தன் கண்னை சீன கருப்பு துணி கொண்டு கட்டியிருப்பார் போல அதனால் மோடி அரசை குறை கூறுவது மட்டும் தான் தெரியும். 2013 ஆம் ஆண்டு ராணுவ அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்பொது நாடளுமன்ற அவையில் இருந்தாரா இல்லையா என்பது ராகுலுக்கு மட்டுமே வெளிச்சம் சாமி.

2013 ஆம் ஆண்டு காங்கிரசு பேரியக்கத்தின் ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்த ஏ.கே. ஆண்டோனி பேசுகிறார். உண்மையை ஒத்துக்கறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்தியாவை விட சைனா உட்கட்டமைப்பில் மிகவும் மேம்பட்டு காணப்படுகிறது. இதுதான் சரித்திரம் ஏனெனில் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அதாவது நேரு மாமா ஒரு கொள்கை வைத்திருந்தார். அதன்படி தேசத்திற்கு எது நல்ல பாதுபாப்பு என்றால் எல்லைப்புறங்களை வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்வது மட்டும்தான்.

நாட்டின் வளர்ச்சியடையாத எல்லைப் புறங்கள்தான் வளர்ச்சியடைந்த எல்லைகளைவிட பாதுகாப்பானது. அதனால் தொடர்ந்து பல வருடங்களாக எல்லைப்புறங்களில் எந்த சாலைகளும் கட்டுமானமும் செய்யப்படவில்லை. அங்கு எந்த ஏர் ஃபீல்டும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து சைனா தன் கட்டுமானங்களைத் தொடர்ந்து எல்லைகளில் அமைத்துக் கொண்டுவந்தது. அதன் காரணமாக நாம் அவர்களிடமிருந்து மிகவும் பின் தங்கியிருந்தோம். நம்மோடு ஒப்பிடும்போது, உட்கட்டமைப்பிலிருந்து, திறமையின் அடிப்படையிலிருந்து அனைத்திலும் சைனா மிகவும் மேம்பட்டுக் காணப்பட்டார்கள்.

இதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. இதே காங்கிரஸின் இளவல் இத்தாலிய வாரிசு இப்போது வேறுவிதமாகப் பேசுகிறது. நாட்டை ஆபத்தில் வைத்து விட்டு சென்ற காங்கிரசு பேரியக்கம் தற்போது இந்தியாவில் இருக்கிறதா அல்லது சீன தேசத்தில் இருந்து செயல்படுகிறதா என்பதை இந்திய மக்களுக்கு விளக்கவேண்டும்



Next Story
கதிர் தொகுப்பு
Trending News