Kathir News
Begin typing your search above and press return to search.

ஏற்றுமதியை அதிகரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை : இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2019-20ல் கண்ட வளர்ச்சி !

ஏற்றுமதியை அதிகரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை : இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2019-20ல் கண்ட வளர்ச்சி !

ஏற்றுமதியை அதிகரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை : இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2019-20ல் கண்ட வளர்ச்சி !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 10:15 AM GMT


இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் 2019-20-ல் 1.71 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி வங்கிச் சட்டம் 1981-ன்படி ஏற்றுமதி இறக்குமதி வங்கியின், ஏற்றுமதி மேம்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு அந்நியச்செலாவணியை ஈட்டித் தரும் வகையில், ஏற்றுமதியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.



  1. 2015 ஏப்ரலில் தொடங்கப்பட்ட புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி, இந்திய வாணிபப் பொருட்கள் ஏற்றுமதித் திட்டம் மற்றும் இந்திய சேவைகள் ஏற்றுமதி திட்டம் என்ற இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  2. தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்தும் துறைகளில் ஊக்குவிப்பு வீதம் ஆண்டுக்கு ரூ. 8,450 கோடி செலவு பிடிக்கும் வகையில், இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  3. பொருள் போக்குவரத்துத் துறையில் ஒருங்கிணைந்த மேம்பாட்டை ஏற்படுத்த வர்த்தகத் துறையில் புதிய பொருள் போக்குவரத்துப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  4. 2015-ஆம் ஆண்டு வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூபாய் அடிப்படை ஏற்றுமதிக் கடனுக்கு தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்தும் துறைகளுக்கு 3 சதவீத வரி சமநிலைப்படுத்தும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  5. 2017 ஏப்ரல் முதல் வர்த்தக அடிப்படை வசதி ஏற்றுமதித் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  6. குறிப்பிட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் போக்குவரத்து செலவினத்தைக் குறைக்கும் வகையில், போக்குவரத்து மற்றும் சந்தை உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News