Kathir News
Begin typing your search above and press return to search.

2024-25 நிதியாண்டில் கனிம இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு!இரும்புத் தாது உற்பத்தியில் இந்தியா உலகின் 4வது பெரிய நாடாக உள்ளது

2024-25 நிதியாண்டில் கனிம இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு!இரும்புத் தாது உற்பத்தியில் இந்தியா உலகின் 4வது பெரிய நாடாக உள்ளது
X

SushmithaBy : Sushmitha

  |  27 Feb 2025 4:52 PM

2023-24-ம் நிதியாண்டில் கனிம வளங்களின் உற்பத்தியில் சாதனைப் படைத்ததற்குப் பிறகு நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து வலுவான வளர்ச்சிக் கண்டுவருகிறது கனிம உற்பத்தி அதன் மதிப்பின் அடிப்படையில் இரும்புத் தாது 70 சதவீதம் ஆகும் 2023-24-ம் நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தி 274 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது

தற்காலிக தரவுகளின்படி இரும்புத் தாது உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி வரை 228 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி வரை 236 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது இது 3.5 சதவீதத்துடன் சீரான வளர்ச்சியைக் காட்டுகிறது மேலும் மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி 11.1 சதவீதம் அதிகரித்து 3.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது குரோமைட்டின் உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி 8.7 சதவீதம் அதிகரித்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது

அதோடு பாக்சைட் உற்பத்தியும் 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி வரை 19.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25 நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி வரை 5.6 சதவீதமாக அதிகரித்து 20.6 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது

சுத்திகரிக்கப்பட்ட தாமிர மற்றும் அலுமினியம் உற்பத்தியில் உலக அளவில் முதல் 10 இடங்களில் இந்தியா 2-வது இடத்திலும் இரும்புத் தாது உற்பத்தியில் உலகின் 4-வது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது நடப்பு நிதியாண்டில் இரும்புத்தாது உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சிக் காரணமாக எஃகு உலோகத்தின் தேவை அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News