2025 இறுதிக்குள் இந்தியா-ஐரோப்பியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:ஐரோப்பிய ஆணையம் தலைவர் பிரதமர் மோடி சந்திப்பு!

By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடன் இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்தியாவிற்கு வருவது இது முதல் பயணம் மட்டுமின்றி ஒரு நாட்டில் ஐரோப்பிய ஆணையம் இப்படி விரிவான ஈடுபாட்டை காட்டுவதும் இதுவே முதலாவது என தெரிவித்துள்ளார்
மேலும் இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான இந்த 20 ஆண்டுகால ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமானது இயற்கையானது போக்குவரத்து இணைப்பு துறையில் இந்தியா மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியா பொருளாதார வழிதடத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக உறுதியா நடவடிக்கைகள் எடுக்கப்படும் அந்த வழித்தடத்தின் மூலம் உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முக்கிய காரணியாக இந்த வழித்தடங்கள் செயல்படும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
