2025-26 மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் அடித்த ஜாக்பாட்

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்
அதில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வரி வரம்பில் வருமானம் உள்ள தனிநபர்களுக்கு பூஜ்ஜிய வரி
0-4 லட்சம் வருமானம் பெறுபவருக்கு வரி இல்லை 4-8 லட்சம் வருமானம் பெறுபவருக்கு ஐந்து சதவீத வரியும் 8-12 லட்சத்திற்கு 10 சதவீத வரியும் 12-16 லட்சத்திற்கு 15 சதவீத வரியும் 16-20 லட்சத்திற்கு 20 சதவீத வரியும் 20-24 லட்சத்திற்கு 25 சதவீத வரியும் 24 லட்சத்திற்கு மேல் 30 சதவீத வரியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி பருப்பு வகை உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற விவசாயிகளுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதாவது குறைந்த வேளாண் உற்பத்திக் கொண்ட 100 மாவட்டங்களில் பருப்பு வகை உற்பத்தியில் தன்னிறைவு அடைய பிரதமரின் தன் தானிய க்ரிஷி திட்டம் செயல்படுத்தப்பட்டு இதனால் 1.7 கோடி விவசாயிகள் பயன் பெறுவதோடு அவர்களுக்கு மானியமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 10,000 இடங்கள் இந்த ஆண்டு ஐ.ஐ.டியில் கூடுதலாக 65,000 மாணவர்கள் சேர்க்கை பிரதமரின் உடான் திட்டத்தின் கீழ் 120 புதிய வழித்தடங்களில் விமான சேவை ஸ்விக்கி சோமேட்டோ ஊழியர்களின் நலனுக்காக அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் வகையில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கவும் அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் மையம் அமைக்கவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 200 மையங்கள் அமைக்கவும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஏற்றுமதி செய்யும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் கடன் 20 கோடி ரூபாயாக அதிகரிப்பு,உதயம் தளத்தின் கீழ் பதிவு செய்த குறு நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் தொகையுடன் பிரத்தியேக கிரெடிட் கார்டு,எஸ்.சி எஸ்.டி பெண்களுக்கும் கடன் வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்,22 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு காலணி தயாரிக்கும் துறையில் ஏற்படுத்த நிதி வசதி ஆகியவை மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது