2027 இல் வீரர்கள் விண்ணில் பறப்பார்கள்:ககன்யான் திட்டத்தின் அப்டேட் கூறிய இஸ்ரோ தலைவர்!

By : Sushmitha
2027 ககன்யான் திட்டம் செயலுக்கு வரும் என விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்
அதாவது 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின முறையில் ககன்யான் திட்டத்தை அறிவித்தார் இந்த திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டது பிறகு இந்த பணிக்கு தேவையான முக்கிய தொழில்நுட்பகளில் தேர்ச்சி பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் இந்த திட்டம் செயல்படுத்துவதில் பல தாமதங்கள் ஏற்பட்டது
இறுதியாக 2025இல் இந்த பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது பிறகு 2026க்கு இந்த பணி திட்டமிடப்பட்டது ஆனால் தற்பொழுது 2027 ஜனவரி-மார்ச் இடையிலான காலகட்டத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் நாராயணன் ககன்யான் விண்கலனை விண்வெளிக்கு செலுத்தும் திட்டமானது அதன் அசல் காலகட்டத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் தாமதமாகியுள்ளது 2027 ஜனவரி-மார்ச் மாதத்திற்கு இடையே இத்திட்டம் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்
ஏனென்றால் இந்த திட்டத்திற்கு தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வீரர்கள் இன்றி விண்ணில் செலுத்தப்படும் திட்டம் இந்த ஆண்டு நடத்தப்படும் எனவும் 2027 வீரர்களோடு விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்
