Kathir News
Begin typing your search above and press return to search.

2030 ஆண்டுக்குள் உயரபோகும் அமெரிக்கா-இந்தியா வர்த்தகம்:500 பில்லியன் டாலர் இலக்கு நிர்ணயம்!

2030 ஆண்டுக்குள் உயரபோகும் அமெரிக்கா-இந்தியா வர்த்தகம்:500 பில்லியன் டாலர் இலக்கு நிர்ணயம்!
X

SushmithaBy : Sushmitha

  |  14 Feb 2025 1:35 PM

இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த சந்திப்பில் 2030க்குள் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வர்த்தகத்தை ரூபாய் 43.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மேலும் மெகா பற்றி அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடிக்கடி பேசுகிறார் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம் அமெரிக்காவில் தற்போது உள்ள சூழ்நிலையில் இதனை மேக் இந்தியா கிரேட் அகெய்ன் என மொழிபெயர்க்களாம் என்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா அமெரிக்காவுடன் இரட்டிப்பான வர்த்தகத்தை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

அதுமட்டுமின்றி அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் போர் விமானங்கள் உட்பட அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் இந்த சந்திப்பின் பொழுது வருகின்ற 2030-ம் ஆண்டிற்குள் இரு தரப்பு வர்த்தகத்தை ரூபாய் 43.43 லட்சம் கோடியாக அதாவது 500 பில்லியன் டாலர் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதோடு இதன் மூலம் இரு தரப்பு வர்த்தகமும் தற்போது உள்ளதை விட இன்னும் இரு மடங்கு உயரும் என்பதையும் ஒரு புதிய தைரியமான இலக்கை இருதரப்பு வர்த்தக இந்த இலக்கை இருநாட்டு தலைவர்கள் நிர்ணயத்துள்ளனர் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News