Kathir News
Begin typing your search above and press return to search.

2030-ம் ஆண்டுக்குள் பாரத் 6 ஜி தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க போகும் இந்தியா!

2030-ம் ஆண்டுக்குள் பாரத் 6 ஜி தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க போகும் இந்தியா!
X

SushmithaBy : Sushmitha

  |  12 Dec 2024 4:09 AM GMT

நேற்று டிச 11 மக்களவையில் பேசிய தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர்.பெம்மசானி சந்திரசேகர் தற்போதுள்ள 6ஜி தொழில்நுட்பம் சர்வதேச அளவில் தொடக்க நிலையில் உள்ளது இந்தத் தொழில்நுட்பம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 2023 மார்ச் 23 அன்று இந்தியாவின் 6ஜி தொழில்நுட்பம் குறித்து பாரத் 6ஜி தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை பிரதமர் வெளியிட்டார் இது 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு, மேம்பாடு போன்ற அம்சங்களில் இந்தியா முன்னணி நாடாக திகழும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பாரத் 6ஜி தொலைநோக்குப் பார்வை ஆவணத்தில் குறைந்த செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைத் தொடர்பு சேவைகள் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்

மேலும் இந்த ஆவணத்தின் படி செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு உள்நாட்டு தொழில்துறை நிபுணர்கள் கல்வியாளர்கள் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் தர நிர்ணய அமைப்புகள் ஆகியவற்றின் துணையுடன் பாரத் 6 ஜி கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News