2030 ஆம் ஆண்டுக்குள் 6G வெளியீட்டிற்கு தயாராகும் இந்தியா:அதிவேக மொபைல் நெட்வொர்க்கில் பாரத் விஷன்!

அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்திற்கான ஒரு லட்சிய தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிலையில் உலகளாவிய 6G வெளியீட்டில் இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பாளராகத் தயாராகி வருகிறது என இந்த வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சர் மக்களவையில் பேசியுள்ளார்
அதாவது உலகளவில் 6G இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளது மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வளர்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது முன்னதாக இந்தியா ஏற்கனவே அதன் பாரத் 6G தொலைநோக்குப் பார்வையுடன் அடித்தளத்தை அமைத்துள்ளது
23 மார்ச் 2023 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பாரத் 6G தொலைநோக்குப் பார்வை 2030 ஆண்டின் இறுதிக்குள் 6G தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு மேம்பாடு மற்றும் பயன்பாட்டில் இந்தியாவை முக்கிய பங்களிப்பாளராக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
இந்தத் தொலைநோக்குப் பார்வை மூன்று முக்கியக் கொள்கைகளை வலியுறுத்துகிறது மலிவு நிலைத்தன்மை மற்றும் எங்கும் நிறைந்திருத்தல் இந்த முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல பாரத் 6G கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது இது தொழில்துறை கல்வித்துறை தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தரநிலை அமைப்புகளை ஒன்றிணைத்து வெளியீட்டிற்கான செயல் திட்டத்தை உருவாக்குகிறது
மேலும் உலகளவில் 6G அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் முன்னேறி வருகின்றன சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தற்போது அடுத்த தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகளுக்கான பல பட்டைகளை ஆய்வு செய்து வருகிறது
மேலும் சர்வதேச மொபைல் தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்காக, 4400-4800 MHz,7125-8400 MHz மற்றும் 14.8-15.35 GHz அதிர்வெண் பட்டைகள் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன இந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் 2027 ஆம் ஆண்டில் நடைபெறும் உலக வானொலி தொடர்பு மாநாட்டில் IMT பயன்பாட்டிற்கான இந்த அலைவரிசைகளை அடையாளம் காண்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் இன்று மார்ச் 12 மக்களவையில் தெரிவித்தார்
இந்த அதிர்வெண் பட்டைகள் 6G என்றும் அழைக்கப்படும் IMT2030க்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்