Kathir News
Begin typing your search above and press return to search.

2036 இல் இந்தியாவில் ஒலிம்பிக்.. அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் - அனுராக் நம்பிக்கை..!

2036 இல் இந்தியாவில் ஒலிம்பிக்.. அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் - அனுராக் நம்பிக்கை..!

SushmithaBy : Sushmitha

  |  12 May 2024 6:28 AM GMT

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியில் நடத்துவதற்கே அதிக அளவில் செலவு ஏற்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடியை ஜப்பான் செலவிட்டது. இதனால் அடுத்து இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு இவ்வளவு பெரிய தொகையை இந்தியாவால் செலவிட முடியுமா என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதற்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சிறப்பான பதிலை கொடுத்துள்ளார். அதாவது இந்தியாவின் மூலதன செலவு கடந்த ஆண்டு ரூபாய் 10 லட்சம் கோடி. இந்த ஆண்டு 11 லட்சம் கோடி ரூபாய், இவற்றில் விளையாட்டு உள்கட்ட அமைப்பிற்காக 5,000 கோடி ஒதுக்கிடப்பட்டது.

இந்த செலவை 20 கோடியாக உயர்த்தும்பொழுது சர்வதேச போட்டிகளை இந்தியா நடத்தலாம். அதோடு 2030ல் யூத் ஒலிம்பிக் மற்றும் 2036-ல் ஒலிம்பிக் போட்டியை அகமதாபாத்தில் நடத்த நினைத்திருக்கிறோம். அவற்றை நடத்துவதற்கான உரிமை கோருவதற்கும் உறுதியாக இருக்கிறோம்.

கேலோ இந்தியா மூலம் நம் நாட்டின் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம், வருகின்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்று சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News