2047 ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவுங்கள்:தன்னார்வலர்கள் அழைத்த பிரதமர் மோடி!
By : Sushmitha
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கார்யகர் கவர்ன மஹோத்சவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வரும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்க எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
மேலும் இவர் இந்திய கலாச்சாரத்தின் சேவை என்பது மிகப்பெரிய தர்மமாக அங்கீகரிக்கப்பட்டது பொது சேவை என்பதும் மக்களுக்கு சேவை செய்வதற்கு சமமானது அதனால் இந்த சேவையை திட்டமிட்டு செய்வதன் மூலம் அற்புதமான பலன் கிடைக்கும் பல பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காணவும் முடியும் நாட்டில் உள்ள பல தீய சக்திகளையும் ஒழிக்க முடியும் மேலும் லட்சக்கணக்கானவர்கள் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணையும் பொழுது அது நாடு மற்றும் சமுதாயத்தின் மிகப்பெரிய சக்தியாக மாறும்
அந்த வகையில் வருகின்ற 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த இலக்கை எடுப்பதற்கு வரப்போகின்ற அடுத்த 20 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகள் இந்த இலக்கை அடைய ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என மக்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் ஒவ்வொரு துறையிலும் இந்த உத்வேகம் காணப்படுகிறது அதோடு இந்த இலக்கை ஏற்றுவதற்கு பிஏபிஎஸ் தன்னார்வலர்களும் ஒரு தீர்மானத்தை எடுத்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்