சமூக இடைவெளியை பின்பற்றி, நாடாளுமன்ற கூட்ட ஏற்பாடுகள் : மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 22 க்குள் தொடங்க வாய்ப்பு.!
சமூக இடைவெளியை பின்பற்றி, நாடாளுமன்ற கூட்ட ஏற்பாடுகள் : மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 22 க்குள் தொடங்க வாய்ப்பு.!
மழைக்கால கூட்டத்தொடரை ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத ஆரம்பத்திலேயோ நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனினும் இன்னும் கூட்ட தொடக்க தேதி இன்னும் முடிவாகவில்லை. அரசு கொரோனா தடுப்பு பணிகளில் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருவதால் கூட்டத் தொடருக்கான தேதியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதே சமயம் கூட்டத்தொடரை காணொலி காட்சி மூலம் நடத்தலாமா அல்லது வழக்கமான சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழக்கம் போல நடத்துவதா என்பதற்குரிய முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகரிகள் கூறுகையில் " செப்டம்பர் மாதம் 22 ந்தேதியோ அல்லது அதற்குள்ளோ மழைக்கால கூட்ட தொடர் தொடங்கும் என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கவுள்ளதால் , இடம்போதாது என்பதால் மாநிலங்களவை மாடங்கள், பார்வையாளர் மாடங்கள், நாடாளுமன்ற மைய மண்டபம், பாலயோகி அரங்கம், நூலகக் கட்டடம் ஆகிய இடங்களும் எம்பிக்கள் அமர பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றனர். என்றாலும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றனர்.