Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த 26 வயது இளம் பெண், சாகும் வரை தூக்கிலிட உத்தரவு!

26-year-old woman sentenced to death

பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த 26 வயது இளம் பெண், சாகும் வரை தூக்கிலிட உத்தரவு!

MuruganandhamBy : Muruganandham

  |  20 Jan 2022 8:37 AM GMT

ஜனவரி 19, ஆம் தேதி, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நீதிமன்றம் பாகிஸ்தானிய பெண்ணுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 295-சி பிரிவின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

26 வயதான அனீகா அதீக், வாட்ஸ்அப் மூலம் முகமது நபியைப் பற்றி அவதூறாக குறுஞ்செய்தி மற்றும் கேலிச்சித்திரங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அவர் மே 2020 இல் கைது செய்யப்பட்டார். மரண தண்டனை வழங்கப்படும் வரை சிறையில் வாடியுள்ளார்.

ராவல்பிண்டியின் காரிஸ் நகரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இறக்கும் வரை கழுத்தில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையுடன் மொத்தம் ரூ.2,00,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் மதநிந்தனைக்கு எதிராக சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை கடுமையான சட்டங்கள் உள்ளன. சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் படி, பாகிஸ்தானில் சுமார் 80 பேர் நிந்தனை குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பாதி பேர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்கொள்கின்றனர்.

ஜனவரி மாதம், பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, 2012-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சிறையில் வாடும் ஜாபர் பாட்டி (51) என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். இத்தகைய காட்டுமிராண்டித்தனம் இஸ்லாமிய மற்றும் மிகவும் ஏழ்மையான நாட்டில் மிகவும் பொதுவானதாகிவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில், பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார ஒரு கும்பலால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். எரியும் நபருடன் செல்பி மற்றும் வீடியோ எடுக்க கும்பல் கூடி நின்றபோதும் ஒருவரும் தடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News