மேற்கு வங்க சட்டசபை வரும் 27ந் தேதி வரை மூடல் : 22 பேருக்கு ஒரே சமயத்தில் கொரோனாவால் இந்த முடிவு.!
மேற்கு வங்க சட்டசபை வரும் 27ந் தேதி வரை மூடல் : 22 பேருக்கு ஒரே சமயத்தில் கொரோனாவால் இந்த முடிவு.!

மேற்குவங்கத்தில் சட்டசபை பணியாளர்களில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, வேறு வழியின்றி சட்டசபை நேற்றிலிருந்து முழுவதுமாக மூடப்பட்டது. நாட்டின் மற்ற மாநிலங்களை போல மேற்கு வங்கத்திலும் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 34,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் சட்டசபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சோதனை அடிப்படையில் அது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் சட்டசபையில் தட்டச்சு ஊழியராக உள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்த 22 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கொரோனா என்பதால், வரும் 27ம் தேதி வரை சட்டசபை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.