Kathir News
Begin typing your search above and press return to search.

பழனி முருகன் கோவிலில் வருகிற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் - பளபளக்கும் தங்க கோபுரம்

பழனி முருகன் கோவிலில் வருகிற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் தங்க கோபுரம் சுத்தம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று முடிவடைந்தது.

பழனி முருகன் கோவிலில் வருகிற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் - பளபளக்கும் தங்க கோபுரம்

KarthigaBy : Karthiga

  |  9 Jan 2023 12:00 PM GMT

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இதற்கிடையே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது.


கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டது.

கோபுரங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடந்தது. தற்போது கும்பாபிஷேக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணி முடிவு பெற்றுள்ளன.


பழனி முருகன் கோவிலில் வருகிற 27- ஆம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தங்க கோபுரம் கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தற்போது பணிகள் முடிந்து புதுப்பொலிவு பெற்று, தங்க கோபுரம் பள, பளவென மின்னுவதை படத்தில் காணலாம்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News