மத்திய பிரதேசத்தில் மூன்று மாதங்களாக நிலுவையில் இருந்த அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடந்தது : 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.!
மத்திய பிரதேசத்தில் மூன்று மாதங்களாக நிலுவையில் இருந்த அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடந்தது : 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பலர் பாஜக கட்சியில் இணைந்ததை அடுத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதை அடுத்து சென்ற மார்ச் மாதம் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சிவ்ராஜ் சவுகான் முதல்வராக பதவி ஏற்றார். கொரோனா பரவல் தடைக்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அமைச்சர்கள் அறிவிப்பதிலும் பதவி ஏற்பதிலும் சரியான சூழல்கள் ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஏப்ரல் மாத மத்தியில் சவுகானுக்கு துணையாக 5 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். மார்ச் முதல் மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் நிலுவையில் இருந்த நிலையில் இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
28 அமைச்சர்கள் பதவியேற்புக்கான பதவிப்பிரமாணம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அவர்களுக்கு சத்தியப்பிரமாணத்தை மத்திய பிரதேசத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருக்கு பதிலாக உத்தர பிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் படேல் , மத்திய பிரதேச மாநிலத்திற்கு பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், இன்று மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.