2,800 கி.மீ நீளமுள்ள உலகின் மிக நீளமான கண்ட்லா-கோரக்பூர் எல்பிஜி குழாய்த்திட்டம்:2025 ஜூன் மாதத்திற்குள் இயக்கயுள்ளதாக மத்திய அரசு அறிக்கை!

By : Sushmitha
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கண்ட்லாவிலிருந்து வடக்கே கோரக்பூர் வரை நீண்டு செல்லும் உலகின் மிக நீளமான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு குழாய்த்திட்டத்தை ஜூன் 2025க்குள் இந்திய அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் முழுமையாக இயக்கத் தயாராக உள்ளன
1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டம் எரிபொருள் போக்குவரத்து செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என்றும் சாலை விபத்துகளைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
சாலை வழியாக எல்பிஜி போக்குவரத்து தொடர்பான ஆபத்துகள் சமீபத்திய விபத்துக்கள் அதிகரித்துவிட்டது அதாவது கடந்த மாதம் கோயம்புத்தூரில் ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரின் சில பகுதிகள் ஸ்தம்பித்தன இதேபோல் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் ஒரு லாரி ரசாயனம் நிறைந்த டேங்கர் லாரியுடன் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர் 45 பேர் காயமடைந்தனர் மற்றும் டஜன் கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன
இனி இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கு 2,800 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குழாய் பாதையை இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை தங்கள் கூட்டு முயற்சியான IHB லிமிடெட் மூலம் உருவாக்கி வருகின்றன இந்த குழாய் பாதை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கண்ட்லாவிலிருந்து வடக்கே கோரக்பூர் வரை நீண்டிருக்கும், முதல் கட்டம் மார்ச் 2025 இல் செயல்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது
உலகின் மூன்றாவது பெரிய எல்பிஜி நுகர்வோரான இந்தியாவில் குறிப்பாக வீட்டு சமையலுக்கு எரிபொருள் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது மேலும் மார்ச் 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் உள்நாட்டு எல்பிஜி நுகர்வு கடந்த பத்தாண்டுகளில் 80 சதவீதம் அதிகரித்து 29.6 மில்லியன் டன்களை எட்டியுள்ளது
