3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் இளைஞர்களுக்கு தேவை : மாடர்னா CEO வலியுறுத்தல்.!
By : Bharathi Latha
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. மேலும் நோய் தொற்றும் தீவிரம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் கட்டாயம் இளைஞர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போட்டுக் கொள்வது அவசியம் என மாடர்னா CEO அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதை அடுத்து, தற்போது அமெரிக்காவில் மாடர்னா தடுப்புமருந்து அமெரிக்கர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
உலக அளவில் பைசர் பயான்டெக் தடுப்பு மருந்தை அடுத்து மாடர்னா தடுப்பு மருந்து அதிகப் புகழ் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாடர்னா நிறுவனத்தின் CEO ஸ்டிஃபானி பேன்செல் இதுகுறித்து கூறுகையில், "கொரோனா வைரஸ் தொடர்ந்து வீரியம் அடைந்து வருவதை அடுத்து வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கும் 3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம். இதனால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வீரியமிக்க வைரஸ் தாக்கினால் அதனை எதிர்க்கும் திறன் மேம்பாட்டு அடையும். பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.
மாறிவரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மாறுகிறது. வைரஸ் எந்த விதமாக மாறினாலும் அதனை எதிர்க்கும் அதிக வீரியம் மிக்க தடுப்பு மருந்தை உருவாக்குவதில் அனைத்து மருந்து நிறுவனங்களும் தற்பொழுது ஆர்வம் காட்டி வருகின்றன. மாடர்னா தடுப்புமருந்து 94% பலன் அளித்தாலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் பூஸ்டர் டோஸை அளித்தால்தான் தடுப்பு மருந்தின் வீரியம் நுரையீரலுக்குள் நன்றாக செயல்படுகிறது. இதனாலேயே பல இளைஞர்களுக்கு 3வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என ஸ்டீபனி தற்போது வலியுறுத்தியுள்ளார்.