Kathir News
Begin typing your search above and press return to search.

30 நிமிடத்தில் விற்று தீர்ந்த ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள்

30 நிமிடத்தில் விற்று தீர்ந்த  ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jan 2022 12:30 PM GMT

30 நிமிடத்தில் திருப்பதி ஏழுமலையான் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் 3.36 லட்சம் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விற்றுத் தீர்ந்தன.


இன்று காலை 9 மணி அளவில் அடுத்த பிப்ரவரி மாதத்திற்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாகின, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியான 30 நிமிடத்தில் 3 லட்சத்தி 36 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன பெரும்பாலான பக்தர்கள் இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாமல் தவித்தனர் டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


மீண்டும் நாளை காலை 9 மணி அளவில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வீதம் 2 லட்சத்தி 70 ஆயிரம் டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில வெளியிடப்படுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News