30 ஆண்டுகளாக தேடப்பட்ட தீவிரவாதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்கள்! என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

By : G Pradeep
தமிழகத்தில் நடந்த பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு அடிப்படையாக இருந்து கடந்த 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தீவிரவாதியான அபுபக்கர் சித்திக் வீட்டில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்ததாக எழுந்த விவகாரத்தை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் ஆந்திராவிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி ரத யாத்திரையின் போது மதுரை திருமங்கலத்தில் பைப் வெடிகுண்டு வைத்ததில் தொடங்கி, பாஜக இந்து முன்னணி நிர்வாகி கொலை உட்பட பல செயல்களில் அபுபக்கருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த தமிழக போலீசார் ஆந்திராவிற்கு அவர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது அங்கிருந்து 30 கிலோ எடை உடைய வெடி மருந்தும், மின்னணு கருவிகளையும் ஆந்திர போலீசார் கைப்பற்றி தனியொரு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக என்ஐஏ அதிகாரிகள் ஏழு நாள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக சென்னை வந்துள்ளனர். இந்நிலையில் அபுபக்கரை புழல் சிறையில் இருந்து மிகுந்த பாதுகாப்புடன் ஆந்திராவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
