புதுச்சேரியில் ஒரே நாளில் 30நபர்களுக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியான அரசு.!
புதுச்சேரியில் ஒரே நாளில் 30நபர்களுக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியான அரசு.!

புதுச்சேரி மாநிலத்தில் நாளில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 245 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆகவும் உயர்ந்துள்ளது. 109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த தட்டாஞ்சாவடி விவிபி நகரை சேர்ந்த மேலும் ஒரு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல் தெரிவிக்கும்போது
புதுச்சேரியில் ஒரே நாளில் 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்துடன் தொடர்புடைய 7 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 109 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்டு கரோனா தொற்றுடன் கடந்த 2 ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தட்டாஞ்சாவடி விவிபி நகரை சேர்ந்த 80 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் ஜிப்மர் லாண்டரியில் வேலை செய்த நபரின் தாத்தா ஆவார். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 5 பேர் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அரசு மருத்துவ கல்லூரியில் 2 பேரும், ஜிப்மரில் 8 பேர் என 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவற்றில் 7 பேர் மருத்துவர்கள் ஆவர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 109 ஆக அதிகரித்துள்ளத.
இன்று பாதிக்கப்பட்ட 30 பேரில் 25 பேர் கதிர்காமம் மருத்துவ கல்லூரியிலும், 3 பேர் ஜிப்மரிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையிலிருந்து காரைக்காலுக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் 100 பேரும், ஜிப்மரில் 20 பேரும், காரைக்காலில் 6 பேரும், மாஹே பிராந்தியத்தில் 4 பேரும், பிற பகுதியில் ஒருவரும் என 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் கொரோனா தொற்று அச்சத்தில் இருந்து விலகி விட்டனர். தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை. இனி வரும் காலங்களில் அதிகப்படியான தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
தற்போது புதுச்சேரியில் கடலூர், விழுப்புரம் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை எவ்வளவு போராடினாலும் மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கட்டுப்படுத்த முடியாது. தொடர்ந்து, வியாபாரிகளுடன் பேசி கடைகளின் நேரத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
தற்போது புதுச்சேரியில் 73 பகுதிகள், காரைக்கால், மாஹேவில் தலா 3 பகுதியில் என மொத்தம் 79 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. 4 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 929 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்து 511 பரிசோதனைகள் நெகடிவ் என்று வந்துள்ளது. 189 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன'' என்றார்.