Kathir News
Begin typing your search above and press return to search.

30-ன் சக்தி இந்தியாவை இயக்குகிறது.. 30-30-30 மோடி அரசின் இலக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா?

30-ன் சக்தி இந்தியாவை இயக்குகிறது.. 30-30-30 மோடி அரசின் இலக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Dec 2023 11:25 AM GMT

30 வயதிற்கு உட்பட்டவர்களின் முயற்சியால் 30 ஆண்டுகளுக்குள் நமது பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும் கனவு இன்று இந்தியாவை இயக்குகிறது. இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பஹ்ரைன் கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார். முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஓர் உலகளாவிய பிரகாசமான இடமாகும். அங்கு நமது சந்தை மூலதனம் 2 நாட்களுக்கு முன் 4 டிரில்லியன் டாலரைத் தொட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். உலக நாடுகளுடன் ஈடுஇணையற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்தியா செயல்படுகிறது ஆணவத்துடன் அல்ல என்று கோயல் சுட்டிக்காட்டினார்.


இந்தியா 10 ஆண்டுகளில் துறைமுகத் திறன் இரட்டிப்பாக்கப்பட்ட ஒரு பொருளாதாரமாகும். அங்கு வணிக விமான நிலையங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 74-ல் இருந்து 150 ஆக இரட்டிப்பாகியுள்ளன. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 225 ஆக மேலும் வளரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அங்கு நவீன உயர்தர ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளின் பெரிய கட்டமைப்புக்குத் துணையாக 140 புதிய உள்நாட்டு நீர்வழிகள் தொடங்கப்பட்டுள்ளன. உலகின் பிற பகுதிகளில் நாம் காணும் அழகான உள்கட்டமைப்பு இப்போது இந்தியாவில் உருவாக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். பார்வையாளர்கள் தில்லியில் வந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்க்க வேண்டும் அல்லது உயர்தர சர்வதேசக் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரத் மண்டபத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


வளமான, துடிப்பான பொருளாதாரம், இந்திய மக்களை கவனித்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்கும் ஓர் அமைப்பு, எளிதான வாழ்க்கை வாய்ப்புகளுடன் கூடிய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் காணுமாறு அவர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். வளர்ச்சி, நல்ல நிர்வாகம், மன உறுதி, உண்மையான நம்பிக்கை, நிலைத்தன்மையைப் பிரதிபலிக்கும் பசுமைத் தொழில்நுட்பங்கள் ஆகிய 5 ஜி திட்டங்களில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News