Kathir News
Begin typing your search above and press return to search.

புழக்கத்தில் ரூபாய் 31 லட்சம் கோடி ரொக்கம்- நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தகவல்

நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூபாய் 31 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரொக்கம், புழக்கத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறினார்.

புழக்கத்தில் ரூபாய் 31 லட்சம் கோடி ரொக்கம்- நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தகவல்

KarthigaBy : Karthiga

  |  14 March 2023 7:00 AM GMT

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

நாட்டில் கடந்த 2014 - ஆம் ஆண்டு 13 லட்சம் கோடி கரன்சி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூபாய் 31 லட்சத்து 33 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.7 சதவீதமாகும் .பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி புழக்கத்தில் இருந்த கரன்சி ரூபாய் 13 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக குறைந்தது. ஆனால் அதன் பிறகு அதிகரித்தபடி சென்றது.


2018 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூபாய் 18 லட்சத்து 29 ஆயிரம் கோடி கரன்சியும், 2019 ஆம் ஆண்டு ரூபாய் 21 லட்சத்து 36 ஆயிரம் கோடி கரன்சியும், 2020 ஆம் ஆண்டு ரூபாய் 24 லட்சத்து 47 ஆயிரம் கோடி கரன்சியும் 2021 ஆம் ஆண்டு 28 லட்சத்து 53 ஆயிரம் கோடி கரன்சியும் புழக்கத்தில் இருந்தன. குறைவான ரொக்க பயன்பாடு கொண்ட பொருளாதாரத்தை நோக்கி செல்வதே மத்திய அரசின் நோக்கம் . இந்தியாவில் கடனாளிகள் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டது .


கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நிலவரப்படி மொத்த விலை பிரிவில் ரூபாய் 126 கோடியே 27 லட்சமும் சில்லறை விலை பிரிவில் ரூபாய் 4 கோடியே4 லட்சம் என மொத்தம் 131 கோடி டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில் உள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News