சீனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் கைகோர்த்த ரஷ்யா - 33 போர் விமானங்கள் இந்தியாவை நோக்கி விரைகிறது!
சீனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் கைகோர்த்த ரஷ்யா - 33 போர் விமானங்கள் இந்தியாவை நோக்கி விரைகிறது!

இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், இந்தியாவுக்கு போர் விமானங்களை விரைவில் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில், ஒட்டுமொத்த கால்வன் ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கும் உரிமை கொண்டாடுவதன் மூலம், சியோக் ஆற்றுப் பகுதிக்குள் இந்தியாவின் உரிமையை ஒடுக்கிவிடலாம் என சீனா கருதுகிறது.
இப்படிச் செய்து விட்டால், மோதல் நிகழும்போது தார்பக்-சியோக்-தௌலத் பெக்கால்டி சாலையை கைப்பற்றுவதோடு, தௌலத் பெக்கால்டிக்கு முன்பாக உள்ள கடைசி இந்திய கிராமமான முர்கோ வழியாக பாகிஸ்தானுக்கு மற்றொரு சாலையை திறக்க முடியும் என சீனா கருதுகிறது.
இதனை இந்திய இராணுவம் தடுத்த நிலையில், இரு நாடுகளுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவை விரைவில் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலையடுத்து இந்தியா -ரஷ்யா இடையிலான விமான பேர ஒப்பந்தத்தின் படி 33 போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.
இதில் 12 சுகோய் விமானங்களும் 21 மிக் 29 விமானங்களும் அடங்கும். விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.