Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகளின் கூடாரமாகிறதா தமிழகம்? #NIA அதிர்ச்சி தகவல்!

தீவிரவாதிகளின் கூடாரமாகிறதா தமிழகம்? #NIA அதிர்ச்சி தகவல்!

தீவிரவாதிகளின் கூடாரமாகிறதா தமிழகம்? #NIA அதிர்ச்சி தகவல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Oct 2019 2:47 PM IST



ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இருக்கும் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இலங்கை புலனாய்வு அமைப்பு, இந்திய மாநிலங்களான கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு ISIS என்ற சர்வதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளது என்று கூறியது. இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை மத்திய அரசு மேற்கொண்டது.


ஜூலை மாதம் முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் அதிரடி சோதனைகள் நடைபெற்றது. இலங்கை தற்கொலை தீவிரவாதியாக ஜஹ்ரான் ஹாசீம், இளங்காலையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு தமிழகம் வந்தாக தெரிகிறது. அவன் எங்கே தங்கினான், யாரை சந்தித்தான் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. கோவை, சென்னை, திருநெல்வேலி உட்பட பல இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.


இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியா முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 33 பேர் தமிழத்தை சேர்ந்தவர்கள், 19 பேர் உத்திர பிரதேசத்தையம், 17 பேர் கேரளாவையும், 14 பேர் தெலங்கானாவையும் சார்ந்தவர்கள் என்று கூறியது. மேலும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்புள்ளது என்று கூறியது. சமீபத்தில், மத்திய அரசு NIA சட்டங்களை வலுப்பெற செய்ததிற்கு, தி.மு.க மற்றும் காங்கிரஸ் போன்ற காட்சிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/ANI/status/1183625106209116160

Next Story
கதிர் தொகுப்பு
Trending News