34 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளுடன் நாட்டில் முன்னிலை வகிக்கும் தமிழகம்!வழங்கப்பட்ட 126 வகை விருதுகள்!

By : Sushmitha
2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலை பெற்றுள்ளது இந்த நிதியாண்டில் இவ்வட்டம் ரூபாய் 1,316.80 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்ததோடு அனைத்து அஞ்சல் வட்டங்களிடையே 2-வது இடத்தை பெற்றது இந்த வருவாயில் ரூபாய் 720.39 கோடி நிதிச்சேவைகள் மூலம் ஈட்டப்பட்டது ரூபாய் 596.41 கோடி அஞ்சல் துறை செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்டது
இந்த அஞ்சல் வட்டத்தில் 2023-24 நிதியாண்டில் சிறப்புமிக்க சேவையாற்றியவர்களுக்கான விருதுகள் 2025 மார்ச் 10 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன தமிழ்நாடு வட்ட முதன்மை தலைமை போஸ்ட் மாஸ்டர் மரியம்மா தாமஸ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்
அஞ்சலக சேமிப்பு வங்கி ஸ்பீடு போஸ்ட் பார்சல் சேவைகள் சர்வதேச அஞ்சல்கள் அஞ்சலக ஆயுள் காப்பீடு ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் ஆதார் பரிவர்த்தனைகள் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் உட்பட 126 வகைமைகளில் விருதுகள் வழங்கப்பட்டன
