Kathir News
Begin typing your search above and press return to search.

இனி நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் - 34 ஆண்டுகால கல்விக் கொள்கையை மாற்றி அமைத்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் தலைமையில் உருவான புதிய கல்விக்கொள்கை!

இனி நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் - 34 ஆண்டுகால கல்விக் கொள்கையை மாற்றி அமைத்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் தலைமையில் உருவான புதிய கல்விக்கொள்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 3:46 AM GMT

மத்திய கேபினட் அமைச்சரவையின் ஒப்புதலை பெற்ற பிறகு புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த கல்வி முறையை மாற்றி அமைத்து, இந்தியா முழுவதுக்கும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டு வருவது குறித்த பல அம்சங்கள், இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. தற்போது இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டதுள்ளது.

உலக கல்வித்துறையில் இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை செப்டம்பர்-அக்டோபர் மாதம் தொடங்கும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்த சிறப்பு அம்சங்களை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவ்டேகர் மற்றும் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  1. 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய புதிய கல்விக்கொள்கை உதவும்.
  2. எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதுடன், உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.
  3. 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறையும் நிறுத்தப்படும்.
  4. கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.
  5. நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.
  6. கல்விக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.
  7. இணைய வழி பாடங்களை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  8. பள்ளிகளில் கணினிகளின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு அவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  9. கல்வி கற்பதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.
  10. கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணங்களை உயர்த்துவது தடுக்கப்படும்.
  11. உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரவும் அனுமதி வழங்கப்படும்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News