Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்கள் : பிப்ரவரி 26ல் மோடி தலைமையில் தொடக்கம்!

தமிழகத்தில் உலக தரத்தில் மோடி தலைமையில் 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்கள் : பிப்ரவரி 26ல் மோடி தலைமையில் தொடக்கம்!

KarthigaBy : Karthiga

  |  25 Feb 2024 4:47 AM GMT

தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளை பிரதமர் மோடி திங்கட்கிழமை அடிக்கல் நாட்டில தொடங்கி வைக்க உள்ளார். நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை மின்தூக்கி, மின் படிக்கட்டு , உள்ளூர் தயாரிப்பை முன்னிலைப்படுத்தும் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.


நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் .இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:-


முக்கிய ரயில் நிலையங்கள் 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள் , திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் 32 ரயில் நிலையங்கள், தென்மேற்கு ரயில்வே சார்பில் தர்மபுரி, ஓசூர் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.


இதில் திருநெல்வேலி ரயில் நிலையம் ரூபாய் 270 கோடியிலும் கும்பகோணம் ரயில் நிலையம் ரூபாய் ந 108 கோடியிலும் , திருச்சி ரயில் நிலையம் ரூபாய் 384.81 கோடியிலும், செங்கனூர் ரயில் நிலையம் ரூபாய் 25 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளன. மற்ற ரயில் நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடங்கி இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது .


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News