370 நீக்கம் காஷ்மீர் மக்கள் அமோக ஆதரவு - ஜம்முவில் 93% தோடா - 83% ; லடாக் - 67% ;காஷ்மீரில் 58% மக்கள் ஆதரவு !!
370 நீக்கம் காஷ்மீர் மக்கள் அமோக ஆதரவு - ஜம்முவில் 93% தோடா - 83% ; லடாக் - 67% ;காஷ்மீரில் 58% மக்கள் ஆதரவு !!
By : Kathir Webdesk
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அந்தஸ்து மூலம் குளிர் காய்ந்து வந்த பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், மத்திய அரசின் நடவடிக்கை பேரிடியாக இறங்கி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களை போல சட்ட ரீதியாக இந்தியாவுடன் ஒருங்கிணைந்துள்ளது. அது மட்டுமின்றி மத்திய அரசின் திட்ட பணிகள் அனைத்தும் இனி அம்மாநில மக்களுக்கு நேரடியாக தங்கு தடையின்றி கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள காஷ்மீர் மாநிலம் இனி வளர்ச்சியடையும். நல்ல சாலை வசதிகள், தொழிற்சாலைகள், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதனால் பெரும்பாலான காஷ்மீர் மாநில மக்கள் மோடி அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு, காஷ்மீர், லடாக், தோடி பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கையை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சி.என்.என். நியூஸ்18 தொலைக்காட்சி கருத்து கணிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொத்த காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் நரேந்திர மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு பேராதரவு தெரிவித்து உள்ளனர்.
ஜம்மு, தோடா, லடாக், காஷ்மீர் ஆகியவற்றை தனித்தனி மண்டலங்களாக பிரித்து இந்த கருத்து கணிப்பை நடத்தி உள்ளனர். 20 நிருபர்கள் குழு இதில் ஈடுபட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
ஜம்மு:
காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கத்திற்கு ஜம்மு மண்டலத்தில் 93 சதவீம் ஆதவு தெரிவித்துள்ளனர். 4 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் நடுநிலை வகித்துள்ளனர்.
தோடா:
தோடா மண்டலத்தில் 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 17 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லடாக்:
லடாக் மண்டலத்தில் 67 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லடாக் மற்றும் லே பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதேரவு தெரிவித்துள்ளனர். கார்கில் பகுதியில் உள்ளவர்களில் அதிகமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர்:
பாகிஸ்தான் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்கம் மற்றும் பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ள காஷ்மீர் மண்டலத்தில் 58 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 12 சதவீதம் பேர் நடுநிலை வகித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 98 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து கணிப்பில் அனைத்த பிரிவினரும் கலந்துகொண்டனர். குறிப்பாக முஸ்லிம்கள் பெண்கள், இளைஞர்கள் அதிக அளவி்ல் கலந்துகொண்டுள்ளனர்.
ஆதரித்து கருத்த தெரிவித்த பெரும்பாலானோர், இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், நல்ல மருத்துவம் கிடைக்கும் என்றும் மோடி அரசில் பல்வேறு திட்டங்கள் இனி தங்களுக்கும் கிடைக்கும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பட்டியலின மக்கள், தங்களுக்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும், இதற்காக பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி என்றும் தெரிவித்தனர்.