போர் பதற்றத்தால் இராணுவ பலத்தை அதிகரிக்க ரூ. 38,900 கோடி அவசர செலவுக்கு ஒப்புதல் - 21 ரஷ்ய போர் விமானங்கள் வாங்கவும் முடிவு.!
போர் பதற்றத்தால் இராணுவ பலத்தை அதிகரிக்க ரூ. 38,900 கோடி அவசர செலவுக்கு ஒப்புதல் - 21 ரஷ்ய போர் விமானங்கள் வாங்கவும் முடிவு.!

சீன - இந்திய எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகின்ற்றது. இருநாடுகளும் 3,600 கிலோமீட்டர் நீல எல்லை நெடுகிலும் எப்போதுமில்லாத வகையில் தங்கள் துருப்புக்களை அதிக அளவில் குவித்து வருகின்றன. சீன ராணுவம் தங்கள் நாட்டு பலவிதமான போர் விமானங்களையும் எல்லை அருகே உள்ள விமானதளங்களில் குவித்துள்ளது. குறிப்பாக திபெத் மற்றும் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் உள்ள தங்களது தளங்களில் விமானங்களை குவித்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் விதமாக ரூ.38,900 கோடி செலவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 போர் விமானங்கள் ரூ.7,418 கோடிக்கு வாங்கப்பட உள்ளது. உள்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான எச்ஏஎல்.யிடம் இருந்து 12 சுகோய் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10,730 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் உள்நாட்டிலேயே அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொள்ளும் வகையில் இராணுவ உபகரணங்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு செலவினங்களுக்கு ரூ .20,400 கோடி செலவுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்படி 248 அஸ்திரா பிவிஆர் ஏவுகணைகளை விமானப் படை மற்றும் கடற்படைக்கு உள்நாட்டிலேயே வாங்குவது, நிலத்திலிருந்து சுமார் 1000 கி.மீ பாய்ந்து தாக்கும் பினாகா ஏவுகணைகளை வாங்குவது உட்பட பி.எம்.பி ஆயுத மேம்பாடுகள் மற்றும் இந்திய இராணுவத்திற்கான மென்பொருள் வரையறுக்கப்பட்ட ரேடியோக்கள் மற்றும் நீண்ட தூர நில தாக்குதலுக்கான குரூஸ் ஏவுகணை அமைப்புகள் மற்றும் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைக்கான அஸ்ட்ரா ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.
இராணுவ அமைச்சகத்தின் அறிக்கையில், 'தற்போதுள்ள சூழல் மற்றும் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ஆயுதப் படையை பலப்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
https://swarajyamag.com/insta/iaf-to-buy-21-mig-29-12-su-30-mki-fighter-jets-from-russia-amid-tensions-with-china-defence-ministry-gives-nod