Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள் இணைந்தன.!

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள் இணைந்தன.!

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள் இணைந்தன.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 2:50 AM GMT

மத்திய நுகர்வோர் உறவுகள், உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான் ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இணைவதற்குத் தேவையான தொழில்நுட்பத் தயார்நிலையை கருத்தில் எடுத்துக் கொண்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஏற்கனவே இருக்கின்ற 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களோடு இந்த 4 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை தேசிய அளவிலான செயல்பாட்டுக்கு ஒருங்கிணைத்துள்ளது.

இவற்றோடு சேர்த்தால் இப்பொழுது ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் கீழ் 1 ஆகஸ்ட் 2020 முதல் 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்fள் இணைந்துள்ளன.

ஆந்திரப்பிரதேசம், பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு&காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகியன இணைந்துள்ள 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

இவற்றோடு சேர்க்க மொத்த என்ஃஎஃப்.எஸ்.ஏ மக்கள் தொகையில் சுமார் 65 கோடி பேர் (80%) நாடு முழுவதற்கும் செல்லுபடியாகக் கூடிய ரேஷன் அட்டைகள் மூலம் இந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் எங்கிருந்தாலும் உணவுப்பொருள்களை இப்பொழுது பெற்றுக் கொள்ள முடியும். மீதி உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை தேசிய அளவில் செல்லுபடியாகும் நடைமுறையில் மார்ச் 2020-21க்குள் ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை என்பது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA) என்பதன் கீழ் வருகின்ற அனைத்துப் பயனாளிகளுக்கும் உணவுப் பாதுகாப்பின் கீழ் தகுதி பெறும் உணவு பொருள்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் குறிக்கோள் நிலையிலான முயற்சி ஆகும்.

ஒருவர் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடத்தைப் பொருட்படுத்தாது ரேஷன் அட்டைகளின் நாடு முழுவதும் செல்லுபடியாகும் தன்மையால் உணவுப் பொருள்களை அவர் பெற முடியும்.

மத்திய அரசின் திட்டமான "பொது விநியோக அமைப்புக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை (IM-PDS)" என்ற திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த அமைப்பின் மூலம் தற்காலிக வேலைகளைத் தேடுவதன் காரணமாக தங்களின் வீடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்கின்ற குடிபெயர் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப் பயனாளிகள் தங்கள் விருப்பம் போல் நாட்டில் எந்தப் பகுதியிலும் இருக்கும் எந்த ஒரு நியாயவிலைக் கடையில் இருந்தும் தங்களுக்குரிய உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு நியாய விலைக் கடைகளில் நிறுவப்பட்டுள்ள பயோமெட்ரிக் அல்லது ஆதார் அடிப்படையில் இயங்கும் விற்பனை புவியிட மின்னணு கருவியைப் பயன்படுத்தி இந்த வசதியானது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News