பிக்பாஸ் சீசன் 4 தொடங்கியது - தொகுப்பாளர் யார் தெரியுமா.!
பிக்பாஸ் சீசன் 4 தொடங்கியது - தொகுப்பாளர் யார் தெரியுமா.!
By : Kathir Webdesk
முதன்முதலாக ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்று வந்தது. அந்த வகையில் தெலுங்கு பிக்பாஸ் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பிக்பாஸ் தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை அடுத்து தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் NTR, நாகர்ஜுனா, நானி என்ற மூன்று தொகுப்பாளர்கள் மூன்று வெவ்வேறு சீசனை நடத்திவந்தனர். இந்நிலையில் தற்போது தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் தொடங்க வேலைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கில் கொரோனா ஊரடங்கு பாராமல் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் சீசன்-4 தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.
இந்த முறை தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4-யை நாகர்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த தகவலை நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அந்த டுவிட்டர் பக்கத்தில் கோட் சூட் உடையில் உள்ள ஷூட்டிங்கில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார். அப்படியே பிக்பாஸ் சீசன் 4 தமிழிலும் தொடங்கினால் நடிகர் கமல் தொகுத்து வழங்குவாரா இல்லை வேறு யாரவது தொகுத்து வழங்குவார்களா என்று பார்ப்போம். இந்த செய்தி தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் மக்களுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று கூறுகின்றனர்