சென்னையில் 4 வயது குழந்தை கற்பழித்து கொடூர கொலை! காமகொடூரன் ஆசிப் கைது! ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் வாய் திறக்காத மர்மம் என்ன? #JusticeforYazhini
சென்னையில் 4 வயது குழந்தை கற்பழித்து கொடூர கொலை! காமகொடூரன் ஆசிப் கைது! ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் வாய் திறக்காத மர்மம் என்ன? #JusticeforYazhini
By : Kathir Webdesk
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர், கொடுங்கையூரை சேர்ந்த பவானி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கொடுங்கையூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு யாழினி, ராஜேஷ் என்ற 2 குழந்தைகள். மூத்த மகள் யாழினிக்கு 4 வயது.
அதுவரை மகிழ்ச்சியா சென்ற ரமேசின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசத்தொடங்கியது. இதற்கு காரணம் பவானி வீட்டின் அருகே வசித்து வந்த ஆசிப். இவன், பவானியை, ஆசை வார்த்தைகளால் மயக்கி தன் வலையில் வீழ்த்தியுள்ளனான். இந்த கள்ள உறவால் கணவன் ரமேசுக்கும் பவானிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால், ஒருகட்டத்தில் ஆசிப்பின் உறவுக்காக தனது காதல் கணவன் ரமேசை பிரிவதற்கும் தயாரானாள் அவள். பின்னர் ரமேசை பிரிந்தே விட்டாள் பவானி.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தனது ஆசை நாயகன் ஆசிப்பை 2-வதாக திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். புழல், கண்ணப்பசாமி நகரில் வசித்து வந்த பவானி, 2 குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டாள்.
இந்த நிலையில் தனது 4 வயது மகள் யாழினியை, பவானியின் 2-வது கணவன் காம வெறிபிடித்த மிருகம் ஆசிப், கற்பழித்து கொலை செய்துள்ளான். இரவில் இந்த கொடூர செயலை அரங்கேற்றிவிட்டு, காலையில் குழந்தை யாழினிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக நாடகமாடி, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை யாழினி ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்து அனுப்பி உள்ளனர் டாக்டர்கள்.
இதற்கிடையே யாழினி இறந்த தகவல் அவளின் தந்தை ரமேசுக்கு தெரியவர, பதறியடித்து ஓடிவந்துள்ளார். குழந்தை யாழினியின் உடலை எரிப்பதற்கு தயாரானபோது அங்கு வந்த ரமேஷ், குழந்தையை தூக்கி பார்த்தபோது, அதன் கழுத்து, முதுகு, வயிறு போன்ற இடங்களில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதோடு குழந்தை யாழினியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு போட்டுள்ளதையும் பார்த்து துடிதுடித்து போயுள்ளார்.
சில வக்கிர வெறியர்கள், காமவெறியால் பெண்களில் மறைவிடங்களில் சிகரெட்டால் சூடுபோட்டு தங்களில் அரிப்பை தீர்த்துக்கொள்வதுண்டு.
குழந்தை யாழினியின் மரணம் இயற்கையானது அல்ல. அவள் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்பதை உணர்ந்த ரமேஷ், உடனே புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வந்து ஆசிப்பை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகுதான் உண்மை தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காம வெறியன் ஆசிப் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடித்து துன்புறுத்தி கொலை செய்தது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..
காம கொடூரன் ஆசிப் மீது மணலி, கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, கஞ்சா விற்றது உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே சில அமைப்புகள் களத்தில் இறங்கி காம வெறியன் ஆசிப்பை காப்பாற்றும் வேலையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள், பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடகங்களில் உள்ள தங்களுக்கு சாதகமானவர்கள் மூலம் ஆசிப்பை மகா யோக்கியன் போன்று செய்திகளை திரிக்கின்ற வேலையிலும் ஈடுபட்டுள்ளனராம். இதனைத் தொடர்ந்து முன்னணி வாரப்பத்திரிகைகளில் செய்தி திரிப்பு நடைமுறைக்கு வரத் தொடங்கி விட்டது.
அன்று ஆசிபாவுக்காக இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்று அனைவரும்தான் குரல் கொடுத்தார்கள், போராடினார்கள். எந்த பாகுபாடும் இல்லாமல், “Justice for Asifa” என்று வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வைத்தார்கள்.
ஆசிபா, காஷ்மீரத்து குழந்தை. ஆனால் யாழினியோ தமிழ் குழந்தை. அதுவும் சென்னையை சேர்ந்த குழந்தை. மிகக் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட குழந்தை.
ஆசிபாவுக்காகவும், பொள்ளாச்சி சம்பவத்திற்காகவும் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்த திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது எங்கே போனார்? அவர், இந்த குழந்தைக்காக ஒரு கண்டனம்கூட தெரிவிக்க வில்லையே, ஏன்? எதற்காக இந்த கள்ள மௌனம்?
கற்பழித்து கொலை செய்யப்பட்ட குழந்தை இந்து என்பதாலா? அல்லது கற்பழித்து கொலை செய்த காம கொடூரன் முஸ்லிம் என்பதாலா?
இதற்கு முன்பு கற்பழிப்பு சம்பவங்களுக்காக வீடியோக்கள் எல்லாம் வெளியிட்ட நக்கீரன் கோபால், எங்கே எச்சில் பிரியாணி நக்குவதற்காக சென்றார் என்று தெரியவில்லை. நெஞ்சு பொறுக்காமல் கவிதை எழுதிதள்ளிய வைரமுத்து, இன்னமும் உயிரோடுதான் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
திருமாவளவன் ஈழத்தமிழரை காப்பற்றிய காங்கிரஸிடம் தஞ்சம் அடைந்தது போல் சில சமுகத்திடம் தஞ்சம் புகுந்து நோன்பு கஞ்சி குடிக்க சென்றுவிட்டாரோ ? பரூக் அப்துல்லாவுக்காக கோர்ட் படி ஏறிய வைகோவுக்கு, ஒரு கண்டன அறிக்கை விடுவதற்கு கூடவா நேரம் கிடைக்கவில்லை?
கண்டதற்கெல்லாம் கண்டன குரல் எழுப்பும் கனிமொழிக்கு என்னவாயிற்று? 4 வயது பிஞ்சு பெண் குழந்தையை, காம கொடூரன் ஒருவன் கசக்கி எறிந்து இருக்கிறான். “அந்த குழந்தை என்ன வேதனையை அனுபவித்து இறந்து இருக்கும்” என்பது கனிமொழிக்கு கூடாவா புரியாமல் போனது?
மாதர் சங்கத்து மங்கையர்கள் எல்லாம் எங்கேயாவது, கூத்தடிக்க போய்விட்டார்களா அல்லது நடிகர் சிப்பு எப்போது அடுத்த பீப் பாடல் வெளியிடுவார் என்று ரூம் போட்டு யோசிக்கிறார்களா?
மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள், கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஒரு குழந்தையின் நீதிக்காககூட குரல் கொடுக்க முன்வரவில்லை என்றால், உண்மையில் இவர்கள் எல்லாம் மாதர்கள் தானா? என்ற கேள்வி உணர்ச்சியுள்ள அனைவருக்கும் எழுவது இயல்பே.
நடந்திருப்பது 4 வயது பச்சிளம் குழந்தைக்கு மாபாதக செயல். ஆனால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட குழந்தை இந்து என்ற காரணத்திற்காகவும், அதை கசிக்கி வீசி எறிந்தவன் ஒரு முஸ்லிம் என்பதற்காகவும், அதன் நீதிக்காக குரல் கொடுக்க நாதி இல்லை என்பது மனித சமுதாயமே வெட்கப்பட வேண்டிய ஒன்று.
சிறுபான்மையினர் ஓட்டிற்காக சிறுபான்மையினர் செய்யும் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை போராட்டம் நடத்த தயங்குகின்றன திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
ஜனநாயகத்தின் 4-வது தூண் என்று மார்தட்டிக்கொள்ளும் ஊடகங்கள்கூட இப்படி ஓரவஞ்சனையில் இறங்கி உள்ளது வேதனையிலும் வேதனை. பெரும்பாலான பத்திரிகைகளில் செய்திகள்கூட வரவில்லை. பெரும்பாலான தொலை காட்சிகளில் செய்திகள் இல்லை. எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சியிலும் விவாதமே இல்லை.
மலர் ஒன்று கொடூர காம மிருக்கத்திற்கு இரையாகி மறைந்து போனது. இதை அறிந்தும், அறியாமல் மிருகங்களாக மாறிபோனது, நாசமாய்போன நம் தமிழ் இதயங்கள்.