Kathir News
Begin typing your search above and press return to search.

40 கோடி ரூபாய் ஊழல்! அமைச்சர் காந்திக்கு எதிராக பாஜக மாநில தலைவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

40 கோடி ரூபாய் ஊழல்! அமைச்சர் காந்திக்கு எதிராக பாஜக மாநில தலைவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!
X

SushmithaBy : Sushmitha

  |  12 Feb 2024 5:33 PM IST

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு தரப்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதை ஆதாரத்துடன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த ஆதாரங்களுடன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி மீது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

மேலும் தி.மு.க ஆட்சியில் ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. பிப்ரவரி 6, 2024 அன்று, இலவச வேட்டி திட்டத்தில் நடந்த மாபெரும் ஊழலையும், அதில் திமுக அமைச்சர் திரு காந்தியின் தலையீட்டையும் அம்பலப்படுத்தினோம்.

இன்று, அனைத்து ஆதாரங்களுடன் தமிழக விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளது.பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, ஊழல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் புகார் அளித்த அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் ராணிப்பேட்டையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது இலவச வேட்டி திட்டத்தில் நடந்த ஊழலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பொழுது கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்பி தான் செய்த ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் பரப்பிய பொய்யான தகவலை நாங்கள் அறிந்தோம்

அதோடு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இருந்து உரிய நேரத்தில் நூல் கொள்முதல் செய்வதிலும் கைத்தறி உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அதோடு இந்த ஆண்டு 1.68 கோடி வேட்டி மற்றும் புடவைகள் தயாரிக்க திமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் தமிழ்நாடு ஜவுளி துறையில் நடைமுறையில் 2003ஆம் ஆண்டில் இருந்து இலவச வேட்டி மற்றும் சேலைகளில் பாலிகாப் பொருட்களால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் இருப்பினும் தோடிசில் உள்ள வார் பருத்தியாக இருக்க வேண்டும் என்பது நியதி! இதனை அடுத்து ஜவுளி ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கான புகழ்பெற்ற ஆய்வகங்களில் ஒன்றான தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் சோதனைக்காக இலவச வேட்டிகளில் ஒன்றை வழங்கினோம், அந்த ஆய்வகத்தின் அறிக்கையின் படி வார்ப்பில் 22 சதவிகிதம் மட்டுமே பருத்தி இருந்ததாகவும் 68% வார் பாலிஸ்டர் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.

மேலும் இதில் ஜவுளித்துறை அமைச்சர் ரூபாய் 60 கோடி ஊழல் செய்துள்ளார் ஆகவே இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டிய வழக்கு மற்றும் அமைச்சரின் ஊழலுக்காக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்த முழு அளவிலான விசாரணையை தமிழக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Source : Asianet news Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News