Kathir News
Begin typing your search above and press return to search.

விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி- மத்திய அரசு நடவடிக்கை

விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி- மத்திய அரசு நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  20 Aug 2023 5:00 PM GMT

பருவமழையின் காரணமாக வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறையத் தொடங்கியுள்ளது.இந்த சூழலில் வரவிருக்கும் மாதங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


இந்த நிலையில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உள்நாட்டு சந்தையில் விளைச்சலை மேம்படுத்தவும் வெங்காய ஏற்றுமதிக்கும் மத்திய அரசு 40 சதவீதம் வரி விதித்துள்ளது. டிசம்பர் 31 - 2023 வரை வெங்காய ஏற்றுமதிக்கான வரி 40 சதவீதமாக தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News