41 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய வீரர்:நெகிழ்ச்சியில் சுபான்ஷீ!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை ஆக்சியம் ஆக்ஸ் 4 என்ற திட்டத்தின் கீழ் அனுப்ப உள்ளது
இந்த திட்டத்தின் கீழ் இந்திய வீரர் சுபான்ஷீ சசுக்லா உள்ளிட்ட நான்கு பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று 14 நாட்கள் தங்கி ஆய்வுகளில் நடத்த உள்ளனர் நாளை ஜூன் 9 காலை இந்த குழு நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட உள்ளது
இந்தக் குழுவில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷீ சுக்லா இருப்பது இந்தியாவிற்கு மிகப் பெருமையாக உள்ளது ஏனென்றால் கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார்
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வது தனக்கு மிகவும் அற்புதமான பயணம் என்றும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் கூறியிருக்கிறார் சுபான்ஷீ