Kathir News
Begin typing your search above and press return to search.

6,131 பேரிடம் 410 கோடி மோசடி புகார் - சிக்கிய ரஹாத் பஸ் நிறுவன உரிமையாளரின் குடும்பம்!

6131 பேரிடம் 410 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் பஸ் நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

6,131 பேரிடம் 410 கோடி மோசடி புகார் - சிக்கிய ரஹாத் பஸ் நிறுவன உரிமையாளரின் குடும்பம்!

KarthigaBy : Karthiga

  |  6 April 2023 10:00 AM GMT

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார் .இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம் ,கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர் . ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். போலீசார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ,கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர் . பின்னர் வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் சுமார் 6131 பேரிடம் 410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது .


தொடர்ந்து திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார் கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் நான்கு பேர் மற்றும் கமாலுதீனின் சகோதரர் அப்துல் கனி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர் . இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மகன் அப்சல் ரகுமான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இரண்டு பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி மதுரையை சிறையில் அடைத்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News