காங்கிரஸ் ஆட்சியில் தான் 43,000 சதுர கி.மீ நிலத்தை சீனாவிடம் தாரைவார்த்தனர் - சோனியா, ராகுலுக்கு நெத்தியடி கொடுத்த நட்டா!
காங்கிரஸ் ஆட்சியில் தான் 43,000 சதுர கி.மீ நிலத்தை சீனாவிடம் தாரைவார்த்தனர் - சோனியா, ராகுலுக்கு நெத்தியடி கொடுத்த நட்டா!
By : Kathir Webdesk
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, சீனாவிடம் இந்தியா ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை தாரைவார்த்து விட்டதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லையில் சீனாவின் அத்துமீறிய செயல்பாடுகளால் தேவையற்ற தகராறுகள் ஏற்பட்டு நமது இராணுவ வீரர்கள் இருபது பேரை சீன வீரர்களும் மூர்க்கத்தனமான தாக்குதலில் நாம் பறிகொடுத்துள்ளோம். நாடு முழுவதும் இதனால் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் சோனியா, ராகுல் மற்றும் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் பேசி வருகின்றனர்.
பா.ஜ.க நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைபாட்டுடன் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என இவர்கள் பொறுப்பற்ற வகையில் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா காங்கிரசுக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் மன்மோஹன் சிங் தலைமையிலான யுபிஏ ஆட்சி காலத்தின் போது, 43,000 சதுர கி.மீ நிலத்தை சதுர மிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை சீனாவிற்கு தாரை வார்த்தது என்றும், 2010 முதல் 2013 வரை, 600 ஊடுருவல்களை அவர்களின் ஆட்சி அனுமதித்தது என்றும் சீனாவின் வாலாட்டத்தை நறுக்க அவர்களில் ஒருவருக்கு கூட துணிவில்லை என்றார்.
இதற்கு முன்னதாக, 2017-ல் நடந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் 2019-ல் நடந்த பாலகோட் வான் தாக்குதல்களை அடுத்தும் அதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு கூறி, காங்கிரஸ் கட்சி, ராணுவ வீரர்களை அவமானப்படுத்தியது என்றும் அவர் கூறினார்.