சர்ச்சையான வழக்குகளையும் சாமர்த்தியமாக கையாண்டவர் - உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதி யார் தெரியுமா.? ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்.!
சர்ச்சையான வழக்குகளையும் சாமர்த்தியமாக கையாண்டவர் - உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதி யார் தெரியுமா.? ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்.!
By : Kathir Webdesk
உச்ச நீதிமன்ற 47வது தலைமை நீதிபதியாக ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று பதவியேற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் 17ம் தேதியுடன் முடிந்தது நிலையில், இதையடுத்து 47வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று பதவியேற்றார்.
நாக்பூரில் பிறந்த பாப்டே.இவரது தந்தை அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே, பிரபலமான மூத்த வழக்கறிஞர் ஆவார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து பாப்டே, 1978ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார் பாப்டே. , 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 2013ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
அயோத்தி வழக்கு, ஆதார் வழக்கு ,தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார்.முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த அமர்விற்கு பாப்டே தலைமை வகித்தார். அதில், ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் என தீர்ப்பு அளித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பாப்டே பதவியேற்றார்.இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா ,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
இவர் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான 17 மாதங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.