Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 5 ஆண்டுகளில் நேரடியாவே 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அசத்தல் திட்டம் - ரூ11.5 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த உற்பத்தி!

அடுத்த 5 ஆண்டுகளில் நேரடியாவே 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அசத்தல் திட்டம் - ரூ11.5 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த உற்பத்தி!

அடுத்த 5 ஆண்டுகளில் நேரடியாவே 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அசத்தல் திட்டம் - ரூ11.5 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த உற்பத்தி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 9:05 AM GMT

மிகப் பெரும் அளவிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கைத் திட்டமானது (பி.எல்.ஐ) 1 ஏப்ரல் 2020 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற இலக்குப் பிரிவுகளின் கீழ் வரும் சரக்குகளின் படிப்படியான விற்பனையில் (அடிப்படை ஆண்டின் மீது) 4% முதல் 6% வரை ஊக்கத்தொகை வழங்குவதை பி.எல்.ஐ திட்டம் விரிவுபடுத்தியுள்ளது. அதாவது தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அடிப்படை ஆண்டைத் (நிதியாண்டு 2019-20) தொடர்ந்து 5 ஆண்டு காலகட்டத்திற்கு இந்த ஊக்கத்தொகையானது வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 31-7-2020 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகைகள் 1-8-2020 முதல் கிடைக்கும்.

பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் மொத்தமாக 22 நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. மொபைல் போன் (இன்வாய்ஸ் மதிப்பு ரூ15,000 மற்றும் அதற்கு மேல்) பிரிவின் கீழ் சர்வதேச மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களான சாம்சங், ஃபாக்ஸ்கான் ஹோன் ஹை, ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. இதில் ஃபாக்ஸ்பான் ஹோன் ஹை, விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்களும் ஆப்பிள் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பவை ஆகும். சர்வதேச அளவில் மொபைல் போன் விற்பனையில் சுமார் 60% வருவாயை ஆப்பிள் (37%) மற்றும் சாம்சங் (22%) ஆகியவை ஒருங்கிணைந்து பெற்றுள்ளன. இந்தத் திட்டமானது நாட்டில் இவற்றின் உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் (உள்நாட்டு நிறுவனங்கள்) பிரிவின் கீழ் லாவா, டிக்சான் டெக்னாலஜிஸ், பாக்வதி (மைக்ரோமேக்ஸ்), பேட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ், சோஜோ உற்பத்திச் சேவைகள் மற்றும் ஆப்டியமஸ் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி மொபைல் போன் உற்பத்தியில் தேசிய சாம்பியன் நிறுவனங்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட மின்னணு உதிரிப்பாகங்கள் பிரிவின் கீழ் ஏடி& எஸ், அக்சன்ட் சர்க்கியூட், விசிகோன், வால்சின், சகஸ்ரா, விட்டஸ்கோ, நியோலிங்க் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டம் ரூ.11,50,000 கோடி (ரூ11.5 லட்சம் கோடி) மதிப்புக்கு மொத்த உற்பத்திக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொத்த உற்பத்தியில் மொபைல் போன் (இன்வாய்ஸ் மதிப்பு ரூ.15,000 மற்றும் அதற்கு மேல்) பிரிவின் கீழ் உள்ள நிறுவனங்கள் ரூ 9,00,000 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன. மொபைல் போன் (உள்நாட்டு நிறுவனங்கள்) பிரிவின் கீழ் நிறுவனங்கள் ரூ.2,00,000 கோடி மதிப்பிலான உற்பத்திக்கு திட்டமிட்டு உள்ளன. அதேபோன்று, குறிப்பிட்ட மின்னணு உதிரிப்பாகங்கள் பிரிவின் கீழ் ரூ.45,000 கோடி உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது குறிப்பிட்ட அளவு ஏற்றுமதிகளை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மொத்த உற்பத்தியான ரூ.11,50,000 கோடியில் 60% அதிகமான தொகை அதாவது ரூ.7,00,000 கோடி ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும். இந்தத் திட்டம் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ரூ.11,000 கோடி கூடுதல் முதலீட்டுக்கு வழிவகுக்கும்.

இந்தத் திட்டமானது அடுத்து வரும் 5 ஆண்டுகளில் தோராயமாக 3 லட்சம் நேரடியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் கூடுதலாக நேரடி வேலைவாய்ப்பு எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மொபைல் போன்களைப் பொறுத்து உள்நாட்டு மதிப்புக் கூட்டல் என்பது தற்போதைய 15-20% இருந்து 35-40% வரை அதிகரிக்கும் என்றும் இது மின்னணு உதிரிப் பாகங்களுக்கு 45-50% வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மின்னணுப் பொருள்களுக்கான தேவையானது 2025ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பி.எல்.ஐ திட்டம் மற்றும் மின்னணுப் பொருள்கள் உற்பத்தியை மேம்படுத்தக் கூடிய இதர முயற்சிகள் ஆகியன மின்னணு உற்பத்தியில் இந்தியாவை மிகச் சிறந்த போட்டியிடமாக மாற்ற உதவுவதோடு சுயசார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான உந்துதலாகவும் இருக்கும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News