Kathir News
Begin typing your search above and press return to search.

50 அடி ஆழத்தில் மூழ்கிய கண்டெய்னர்!! இன்னும் மீட்கபடாத நிலை!! கதறும் பெற்றோர்கள்!

50 அடி ஆழத்தில் மூழ்கிய கண்டெய்னர்!! இன்னும் மீட்கபடாத நிலை!! கதறும் பெற்றோர்கள்!

SushmithaBy : Sushmitha

  |  6 Dec 2023 9:56 AM GMT

சென்னை வேளச்சேரி பிரதான சாலை என்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் பின்புறம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மிக்ஜம் புயல் சென்னையை நோக்கி வரும்பொழுது இந்த கட்டுப்பாடு பணிகள் நடந்த பகுதி மொத்தமாக மூழ்கியுள்ளது. அதுவும் கட்டுமானப் பணியாளர்கள் பணியில் இருக்கும் பொழுதே கண்டெய்னர் ஒன்று மொத்தமாக நீரில் 50 அடி ஆழத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் பின் சுவரும் இந்த 50 அடி ஆழத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த கோர விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் நீரில் மூழ்கியவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை! எத்தனை பேர் இந்த 50 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்ற தகவல் காவல்துறையினரிடம் இல்லை! மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள என் டி ஆர் எப் வீரர்களிடமும் இல்லை!


ஆனால் இந்த விபத்தில் சிக்கி 50 அடி ஆழத்தில் மூழ்கி இருப்பவர்களின் குடும்பங்கள் அப்பகுதியில் அமர்ந்து கதறும் காட்சிகள் பதற வைக்கின்றன. மீட்பு பணியில் ஈடுபடும் தேசிய பேரிடர் மீட்பு படை போதுமான அளவு தங்களால் முயன்ற வரை பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த விபத்தில் தனது மகன்களை இழந்த குடும்பத்தினர் மீட்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் தாமதப்படுத்தி கொண்டே செல்கிறார்கள் என்றும் கூறி ஆளும் அரசின் மீது அதிர்ப்தி தெரிவித்துள்ளனர். விபத்தில் தனது மகன் சிக்கிக் கொண்டதாக ஒரு குடும்பத்தினரும் மற்றொரு குடும்பத்தினர் பெட்ரோல் பங்கில் கேஸ் அடிப்பதற்காக வந்து சிக்கிக் கொண்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை எவ்வளவு பேர் இந்த விபத்தில் சிக்கி உள்ளனர் என்ற விவரம் வெளிவராமல் உள்ளது!

ஆதாரம்: விகடன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News