Kathir News
Begin typing your search above and press return to search.

பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு மூன்று வருடங்களுக்கு ரூ 50 லட்சம் - அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு.!

பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு மூன்று வருடங்களுக்கு ரூ 50 லட்சம் - அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு.!

பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு மூன்று வருடங்களுக்கு ரூ 50 லட்சம் - அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 July 2020 12:34 PM GMT

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் செயல்படுத்தப்படும் மார்கதர்ஷன் திட்டத்தின் கீழ், சிறப்பாகச் செயல்படும் கல்வி நிறுவனங்கள், ஒப்பிடும் போது சற்றே குறைவான நிலையில் உள்ள 10-12 திறமையுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டும். வழிகாட்டும் நிறுவனத்தில் உள்ள சிறப்பான கற்பித்தல், கற்றல் செயல்பாடுகள் கற்றுக்கொள்ளும் நிறுவனங்களுக்குப் பரப்பப்படும்.

பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள், பயணங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனம் ஒன்றுக்கு மூன்று வருடங்களுக்கு ரூ. 50 லட்சம் என நிதி உதவியும் தவணைகளில் வழங்கப்படுகிறது. பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் காணொளிக் காட்சி மூலம் இணையத்தில் நடப்பதால் கோவிட்-19 பெருந்தொற்று அறிவின் ஓட்டத்தைத் தடுத்துவிடவில்லை.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் மார்கதர்ஷன் திட்டத்தின் கீழ் "விளைவு சார்ந்த ஆராய்ச்சியின் தோற்றம் மற்றும் சவால்கள்" என்னும் தலைப்பில் தேசியத் தொழில்நுட்ப நிறுவனம்-திருச்சிராப்பள்ளியால் வியாழனன்றுத் தொடங்கப்பட்ட தேசியப் பயிற்சிப் பட்டறை ஒன்று ஜூலை 17 வரை நடக்கும். தொடக்க விழாவில் பேசிய அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் மார்கதர்ஷன் திட்டம்பேராசிரியர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். என். சிவகுமாரன்அனைத்து கற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் ஆசிரியர்களின் பங்கேற்போடு முக்கியமான விஷயங்கள் குறித்த எட்டு ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பி.டெக் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு துறைகளில் ஒரு மாதத்துக்கான பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கீகாரச் செயல்முறைக்கு விண்ணப்பிப்பதற்குக் கற்றுக் கொள்ளும் நிறுவனங்களின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக விளைவு சார்ந்த கல்வி குறித்து தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.

எதிர் வரும் காலகட்டத்தில் இணையம் மூலமான உள்ளடக்க விநியோகமும், இணைய தளங்கள் சார்ந்த உரையாடல்களும் தான் வேலை செய்யும் முறையாக இருக்கும் என்று பேராசிரியர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்தார். பாடத்திட்டத்தின் முன்னேற்றத்தைப் பொதுமுடக்கம் தடுத்துவிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கற்பித்தல்-கற்றல் திறமைகளைச் செம்மைப்படுத்திக் கொள்ள ஆசிரியர்களுக்கும், புதுமையான யோசனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த மாணவர்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் மார்கதர்ஷன் திட்டம் உதவும் என்று கூறினார்.

கல்வி நிறுவனத்தில் 4 உயர்-சிறப்பு மையங்கள் இருப்பதாகவும், இரண்டு ஏற்கனவே செயல்படும் நிலையில், இன்னும் இரண்டு விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இன்று 37000 கல்லூரிகள், 750 பல்கலைக்கழகங்கள், 9 அறிவியல் துறைகள், 680 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் சுமார் 2,20,000 முழு நேர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியாளர்கள் இருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் டாக்டர். டி. ராமசாமி தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பகிர்தல்களை வலியுறுத்திய அவர், தொழில்நுட்பங்களை வணிகப்படுத்துவதன் மூலம் அறிவுசார் சொத்துகளை மூலதனமாக்கப் பல்கலைக்கழகங்கள் புதிய கருவிகளை ஆராய வேண்டும் என்று தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தை வெற்றிகொள்ள இணையம் மூலமான தகவல் மற்றும் தொழில் நுட்பப் பகிர்தல்கள் உதவியது. தொழில்நுட்பம் மற்றும் தகவல்களின் ஓட்டம் காணொளிக் காட்சி மூலம் எந்தவிதத் தடையுமில்லாமல் நடைபெறுவதால் பொதுமுடக்கத் தளர்வுகள்-2 இன்னும் அதிக வழிகளை உருவாக்கியுள்ளது. பாடத்திட்டத்தின் தடங்கல் பள்ளிக் கல்வியையும் பாதிக்கும் என்பதால், இணைய வழிமுறை பள்ளி அளவிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News