டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் - ஸ்டூவர்ட் பிராட்.!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் - ஸ்டூவர்ட் பிராட்.!

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இருந்து வருகின்றனர். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டார். இதனால் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியது. இங்கிலாந்து அணியும் முதல் போட்டியில் தோல்வியடைந்தது.
இதன் பின்பு இரண்டாவது போட்டியில் அணியில் இடம்பிடித்தார். அந்தப் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் அபாரமாக பந்து வீசினார். இவருடைய சிறப்பான பந்துவீச்சும் மற்றும் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான பேட்டிங்கும் இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தது.
தற்போது மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவு அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நேற்று நான்காம் நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இன்று ஐந்தாம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் ஆரம்பித்தது. இதில் மேற்கிந்திய தீவு அணியின் பேட்ஸ்மேன் கிரேக் பிராத்வைட் 19 ரன்கள் உள்ள நிலையில் ஸ்டூவர்ட் பிராட் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டால் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்பே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது ஸ்டூவர்ட் பிராட் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.